பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை , - . இப்புத்தகத்திற்கு முன்னுரை எழுத வேண்டுமென்று. என்னேக் கேட்டுக்கொண்டனர். எதற்காக என்னே வரித்த னர் என்று எனக்குப் புரியவில்லை. ஆனால் தாகதிண்யம் தட்ட முடியவில்லை; ஒப்புக்கொண்டேன். புத்தகத்தின் பிரதி கிடைத்ததும் புரட்டிப் பார்த்தேன். கேட்டுக்கொண்ட காரணம் தானகவே விளங்கிற்று. நாள் தவருமல் ராஜீயத் துறையில் உழைப்பவருக்கு இப்புத்தகத்தின் அவசியமும் அருமையும் எளிதில் புலப்படும். அதை எதிர்பார்த்தே என்ன வேண்டிக் கொண்டனர் என்று அறிந்தேன். . சமுதாய வாழ்விற்கு அரசியல் அறிவு இன்றியமையாத சாதனம். வாழ்வின் தரம் இந்த அறிவின் அளவைத் தாங்கி யது. வாழ்விலே காணும் குறைகள் நீங்க இந்த அறிவு தேவை , வாழ்விலே காணும் குணங்கள் ஓங்க இந்த அறிவு தேவை , இந்தியாவின் நிலைமை இதற்குப் பிரத்தியகூடிப் பிர மாணம். காட்டிலே இன்று காணும் ராஜியக்கிளர்ச்சி இந்த அறிவை வளர்க்கவே உத்தேசிக்கப்பட்டது. ஏழை எளியோ ரிடையே இந்த அறிவைப் பரப்ப முயன்றதே காந்தியடிக ளது சேவையின் சிறப்பு. ஏனைய மக்களும் தங்கள் கடமை * களையும் உரிமைகளையும் அறிவார்களானல் அவர்கள் கோரும் சுயராஜ்யத்தை யாரும் மறுப்பதற்கில்லே. ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன என்று நாடோடியாய்ச் சொல்லுகிருர்கள். அறி யாமை உறைகட்டியதையே இது காட்டுகிறது. ஆட்சியில் மக்களுக்குப் பங்கும் பொறுப்பும் உண்டென்பதை அவர்கள்' அறிய வேண்டும். பிரஜைகளுக்காக அரசு ஏற்பட்டதே யொழிய அரசுக்காகப் பிரஜைகள் ஏற்படவில்லை. ராமன் ஆட்சி ஏற்படுவதும் ராவணன் ஆட்சி ஏற்படுவதும் மக்கள் கையில் இருக்கின்றன. கண் கொட்டாமல் காத்தால்தான் சுவாதீனம் நிலைக்கும். இது அநுபவம்; சரித்திர சித்தாக் தம். சுவாதீனமே சுகவாழ்விற்குத் தாரகம் -