பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தால், மந்திரிசபை நிர்வாக முறையைவிட இது கிரந்தரத் தன்மை வாய்ந்தது. மேலும், தலைவரின் மந்திரி சபையிலும், காங்கிரஸ் என்னும் சட்டசபைகளிலும் ஒரே கட்சி அதிகா ரத்தைப் பெறுவது அநேகமாய் அசாத்தியமாகையால், சிறு பான்மைக் கட்சியின் அபிப்பிராயத்தை கிராகரித்துப் பெரும் பான்மைக் கட்சி தன் இஷ்டப்படி ஆட்சி நடத்துத்ல் இம். முறையில் அவ்வளவு எளிதன்று. அன்றியும், கிர்வாக இலா காக்கள் தலைவரின் நேரான மேற்பார்வைக்கு உட்பட்டிருப் பதால் பயமின்றித் திறமையாகவும் சுறுசுறுப்பாகவும் வேலே களே கடத்த முடியும். நிர்வாக உத்தியோகஸ்தர்கள் தம் அதிகார வரம்புகளே மீறி நடக்கிருர்களா என்பதைப்பற்றி. முடிவாகத் தீர்ப்பளிக்கும் அதிகாரம் நீதிஸ்தாபனத்தினிடமே உள்ளது. ஆகையால், இந்த ஆட்சி முறையில், கிர்வாக இலாகாவுக்குச் சட்டசபைக்குப் பதில் சொல்லவேண்டிய பொறுப்பு இல்லாவிடினும், அதன் நடவடிக்கைகளைக்கட்டும் படுத்தித் தணிக்கை செய்ய வழிகள் இருக்கின்றன. - | அத்தியாயம் 11 | அரசாங்க அமைப்பு-ா சட்ட்சபை சட்டசபைதான் அரசின் நோக்கங்களை உருவாக்குகின்றது. ஆகையால் போதுமான ஆலோசனைக்கும் விவாதத்துக் கும் வசதியிருக்கும்படி சட்டசபை அமைக்கப்படவேண்டும். அதன் அதிகாரங்களும் கடமைகளும் பொறுப்புக்களும் காட் டிற்கு நாடு வேறுபடுகின்றன. ஆல்ை பொதுவாகச் சட்ட சபையின் கடமைகள் கீழே கூறப்படுவனவாம்: ' (1) அரசியல் திட்டத் திருத்தம்:-பிரிட்டனில் பார்லி. மெண்டுச் சட்டத்தின் மூலம் அரசியல் திட்டத்தைத் திருத்த லாம். அமெரிக்க ஐக்கிய நாடுகளில் அரசியல் திட்டத்தைத் திருத்துவதற்குக் காங்கிரஸுக்குத் தனி அதிகாரம் இல்லை; 78.