பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சட்டசபை சில முக்கியமான உத்தியோகஸ்தர்களே நியமித்தல் முதலி யவை சில உதாரணங்களாம். சட்டசபை அங்கத்தினரின் உத்தியோக காலம் எல்லாத் தேசங்களிலும் ஒரே மாதிரி இருக்கவில்லை. தலைவரின் நிர் வாக முறை உள்ள அரசில், சட்டசபையின் கால அளவு அர சியல் திட்டத்திலேயே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அக்காலத் திற்குள் ஒரு சபையைக்கலேத்துவிட முடியாது. மந்திரிசபை கிர்வாக அரசுகளில் சட்டசபைக்கு ஒரு குறித்த கால அளவு இருப்பினும், சந்தர்ப்பம் நேரும்போது மந்திரிசபை தன் இஷ்டம்போல் அதைக் கலைத்து விடலாம். ஆனல் சாதாரண மாக இவ்வரசுகளில் சட்டசபை ஐந்து வருஷங்களுக்கு நீடித் திருக்கும். பிறகு மறு தேர்தல் நடக்கும். - சட்டசபையின் கால அளவைப்பற்றி அபிப்பிராய பேதம் உண்டு. அப்போதைக்கப்போதுள்ள பொதுஜன அபிப்பிராயம் சட்டசபையில் வெளிப்பட வேண்டுமாகையால் இரண்டு மூன்று வரு ஷங்களுக்கு மேற்பட்டுப் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு சட்டசபை நீடித்திருக்கக் கூடாதென்பது சிலரின் அபிப்பிராயம் சட்டசபை அங்கத்தினர் அரசியல் விஷயங்களில் அனுபவமும் திறமையும் பெறவேண்டு மாகை யால் சட்டசபை ஐந்து முதல் ஏழு வருஷம்வரையில் நீடித் திருப்பதே நலம் என்று வேறுசிலர் கருதுகிரு.ர்கள். குறைந்த கால அளவினல் அடிக்கடி ஏற்படும் தேர்தல்களின் பயனக அனுபவமற்ற அங்கத்தினர்களே மாறி மாறி வரும்படி நேருமாகையால் சட்டசபையின் திறமை குறைவுபடக் கூடும்; ஆதலின் எல்லாவற்றையும் யோசித்தால் ஐந்து வருஷ கால அளவுதான் நல்லதென்று தோன்றுகிறது. சட்டசபை இரண்டு பிரிவுகள் கொண்டதாக இருக்க வேண்டுமென்று நெடுநாளாக ஒர் அரசியற் இரு சபை கொள்கை இருந்து வருகிறது. இவ்விரண்டு :* 596 சபைகளையும் முறையே கீழ்ச் சபை, ம்ேற் சண்ப யென்று சொல்வார்கள். முதற்சபை, இரண்டாவது சபை என்று வழங்குவதும் உண்டு. பெரும்பாலான நாடுகளில் சட்டசபையின் கால அளவு 75