ஆரம்ப அரசியல் நூல் கிழ்ச்சபைக்கே அதிகாரம் அதிகம். இரண்டு சபைகள் வேண்டுமென்பதற்குரிய காரணங்கள் வருமாறு - - (1) இரண்டு சபைகள் இருப்பதால் அரசியல் விஷயங் களில் ஆழ்ந்த பரிசீலனையும், நடவடிக்கைகளில் சாவதான மும் ஜாக்கிரதையும் உண்டாகும். முதலில் ஒரு சபையில் பிரேரணை செய்து மற்ருெரு சபையில் நிறைவேற்றி முடிப் பதால் பிரச்னைகளே கன்ருகப் பரிசீலனை செய்து முடிவு கட்டுவதற்குத் தேவையான அவகாசமும் ஏற்படும். ஒரு சபையில் உணர்ச்சியாலும், எதிர்ப்பாலும், வெளிகிர்ப்பங் தங்களாலும் பொதுநலத்துக்குத் தடை நேர்வதுண்டு ; இரண்டு சபைகள் இருந்தால் அவை ஒரே மாதிரி இருசபை களிலும் நேரிடுவது அருமை. - - - - )ே இரு சபை அங்கத்தினர்களுடைய தேர்தல்களும், வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு முறைகளில் நடை பெறுமாகையால் சட்டசபையின் பொதுநோக்கமும் தீர் மானமும் அநேகமாகம் பரும்பான்மையான ஜனங்களின் அபிப்பிராயத்தை அனுசரித்தே இருக்கக்கூடும். ஒரே சபை யாக இருந்தால் அதன் ஆயுட்கால முடிவிற்குள் பொது ஜன. அபிப்பிராயத்திற்கும் அதற்கும் தொடர்பே அற்றுப்போகும். (3) இரு சபைகள் இருந்தால் தனிக்கூட்டத்தார்களுக் கும் விசேஷ வகுப்புக்களுக்கும் நாட்டுப் பிரிவுகளுக்கும் சில பிர்திநிதித்துவ உரிமைகளை அளிப்பதற்குரிய வசதி களை எளிதில் ஏற்படுத்தலாம். சமஷ்டி அரசியல் ஏற்பாட் டில் இம்முறை பெரிதும் விரும்பத்தக்கதாகும் ; இரு சபை களில் ஒன்று சமஷ்டியில் சேர்ந்த தனி நாடுகளின் பிரதிநிதி யாக இருந்து அவைகளின் உரிமைகளேப் பாதுகாத்து வரக்கூடும். (4). தனிப்பட்ட ஒரு சபை சட்ட நிரூபணம் செய்வ தில் உண்டாகும் யதேச்சாதிகாரத்தை இந்தமுறை ஒரு வாறு தடுக்கும். மற்ருெரு சபையின் அங்கீகாரத்தைப் பெறவேண்டு மென்ற புயம் காரணமாக, சக்தியும் சலுகை யும் பெரிதும் பெற்றிருப்பினும் எந்தத் தனிச் சபையும் சிறிது நிதானமாகவே கடந்து கொள்ளும். 16
பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/88
Appearance