V11 சார்பு நாட்டுக்கு அரசியல் அறிவு தேவையில்லை என்று ஒரு பேராசிரியர் கூறத்துணிந்தார். பரந்த அறிவுக்கு இது அடையாளமல்ல. சுவாதீன நாட்டைவிடச் சார்பு காடுதான் குறைகளை நன்ருய் அறியக்கூடிய நிலைமையில் இருக்கிறது. எந்த முயற்சியும் பயன்படும் பக்குவம் பெறும்போது பராதீன பந்தம் வழி மறிக்கிறது. பல மறியாத பேதைகளே படிந்து கிடப்பர். ஞானவொளி இருட்டை வெருட்டும் : பயத்தைப் பறக்கடிக்கும். ஹனு. மான் தன் பலத்தை யறியப் பிறர் ஞாபகப்படுத்த வேண்டி யிருந்ததாகக் கதை சொல்லுகிருர்கள். மக்களின் பலமும் அத்தன்மையுடையது. அறிவைப் பெருக்கி அவர்களுக்கு ஞாபகமூட்ட வேண்டும். - - - - - - - அநுபவத்தைத் தழுவிச். சாஸ்திர பக்குவம் பெற்றது அரசியல். அடிப்படையான தர்மங்களே விவரிக்க இயலுமே யொழிய கிலேயான ஸ்வரூபத்தை இன்றைக்கும் விதிப்பதற் கில்லை. ஜனநாயகம் என்கிருர்கள் , அதாவது ஜனங்களே நாயகர்கள். அதிகாரத்தின் அஸ்திவாரத்தைக் குறிப்பிடு கிறது. பலருடைய கன்மைக்காகச் சிலருடைய கையில் இந்த அதிகாரம் ஒப்படைக்கப் படுகிறது. சிலர் கையில் தேங்கும் அதிகாரம் சீர் அழிவது சுலபம். சரித்திரம் இதையே மெய்ப்பிக்கிறது. இந்தக் குறையைக் களையவே அரசியல் நூல் வழிகாட்டுகிறது. - கிர்வாகத்தைத் திறம்பட நடத்த அரசியல் அங்கங்கள் பல காலக்கிரமத்தில் உருப்பெற்றிருக்கின்றன. பிரதிநிதிக் கும் வாக்காளருக்கும் உள்ள தொடர்பு, தனித்தொகுதிக்கும் பொதுத்தொகுதிக்கும் உள்ள லக்ஷணங்கள், ஒற்றை ஒட்டுக் கும் மாற்று ஒட்டுக்கும் உள்ள குணங்கள், மேல் சபைக்கும். கீழ் சபைக்கும் உள்ள அதிகார எல்லைகள், சட்டசபைக்கும் நிர்வாக சபைக்கும் உள்ள பிணைப்பு, அதிகார துஷ்பிரயோ கத்தை அடக்க வழிகள் இவையனைத்தும் இப்புத்தகத்தில் விளக்கப்பட் டிருக்கின்றன. அரசியல் ஆரம்ப நூல் என்று புத்தகத்தின் பெயர் இருந்தாலும் பள்ளிச் சிறுவர் களுக்கு மாத்திரம் பயன்படக்கூடியதல்ல ; கல்வாழ்வுக்கும் சுகவாழ்வுக்கும் வழி காட்டும் நூல் வாழ்நாள் முழுவதும் உதவும். - - - - -
பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/9
Appearance