பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரம்ப அரசியல் நூல் (8) பிரிட்டனில் இருப்பதுபோல் இரண்டாவது சபை அங்கத்தினர்களில் சிலரைத் தவிர மற்றவர்கள் எல் லோரும் வார்சுரிமை பெற்றவர்களா யிருக்கலாம். (4) கானடாவிலும், தென் ஆப்பிரிகாவிலும் உள்ளது போல் அங்கத்தினர்கள் ஒரு குறித்த காலத்திற்கோ, ஆயுள் பரியந்தமோ சர்க்காரால் நியமனம் செய்யப்படலாம். மேற்சொல்லிய நான்கு முறைகளில் யாதொன்றும் திருப்திகரமாயில்லை. என்ருலும், ஜனநாயகக் கொள்கை சிறந்து நிற்கும் இக்காலத்தில் சட்டசபைக்குப் பிரதிநிதிகளே நியமனம் செய்யும் முறை சற்றும் ஒவ்வாது. நேர்முகமான தேர்தல்தான் சிறந்ததென்ற அபிப்பிராயமே இக்காலத்தில் மேலிட்டு நிற்கிறது. அன்றியும் இரண்டாவது சபை அங் ஆகத்தினர்கள் முதற் சபை அங்கத்தினர்களைவிட அதிகத் தகுதியுடையவர்களாக இருக்கவேண்டு மென்றும், அவர் களின் உத்தியோக காலமும் டிேத்திருக்க வேண்டுமென்றும், அங்கத்தினர்களின் எண்ணிக்கை முதற் சபையைவிட இரண் டாவது சபையில் மிகவும் குறைந்ததாகவே இருக்கவேண்டு மென்றும் பொதுவான அபிப்பிராயங்கள் இருக்கின்றன. இக்கால ஜனநாயக அரசுகளில் முதற் சபைக்கு இர கசிய ஒட்டுச் சீட்டு முறைப்படி பிரதிநிதிகளே நேர்முகமாகத் தேர்ந்தெடுப்பதுதான் வழக்கத்தில் இருக்கிறது. இச்சபை அங்கத்தினர்களின் உத்தியோக கால அளவில் மட்டும் அரசு களுக்குள் அதிக வித்தியாசம் இருக்கிறது. . ஆ. சில அரசுகளில் வாக்காளர்களை விடச் சட்டசபை அங் கத்தினர்கள் அதிக வயதானவர்களாக இருக்க வேண்டு மென்ற நிபந்தனே உண்டு. இதற்குக் காரணம் வயது முதிர்ந்தவர்கள் ஓரளவு அநுபவமும் மனப் பக்குவமும் பெற் .றவர்கள்ாக் இருப்பார்கள் என்பதேயாம். தொழிற் கட்சி யும் அபேதவாதக் கட்சியும் தலையெடுத்த சித்து பிறகு சட்டசபை அங்கத்தினர்களுக்கு வரு கீழ்ச் .ே ஷச் சம்பளமே ஏற்பட்டுவிட்டது. அந்தக் கட்சிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப் பெற்றுச் சட்டசபைக்கு வரும் அங்க்த்தினர்களிற் பெரும்பாலோர் 18