பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

露 ஆராய்ச்சிக் கட்டுரைகள்

பேரரசரைப் பாராட்டுவதனல், இந்நூல் பத்து வேறு பகுதிகளாகியது.

எட்டுத்தொகை நூல்களுள் பல்வகையாலும் தனிச் சிறப்பு வாய்ந்த ஒரு பெருநூல் பதிற்றுப் பத்து எனல், மிகையாகாது. படைப்புக் காலந்தொட்டு நம் இன்பத் தமிழகத்தில்-தாயகத்தில்-மேம்பட்டு வரும் குடிகள் சேர சோழ பாண்டியர் எனப்படும் மூவேந்தர் குடிகளா ஆம். பண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு என்ருர் ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியர்ை. தமிழகத் தைக் கோல்கோடாது ஆட்சிபுரிந்த சேர சோழ பாண்டி யர் என்னும் மூவே:த்தர் வரிசையுள், முதன்மை படைத் தவர் சேரமன்னரே ஆவர். அவர்களது பெரும்புகழை முற்றிலும் விரித்துப் பேசும் பெற்றியுடைய சங்கநூல் பதிற்றுப்பத்தே ஆகும். புறநானுாறு போன்ற பிற சங்க நூல்களால் ஒரு சில சேர மன்னர்களைப்பற்றி நாம் அறியலாமெனினும், அச்சேர மன்னர்களின் வரலாற்றை பும் சிறப்பையும் முழுவதும் விரித்துரைக்கும் விழுமிய நூலாய் விளங்கும் சீர்மை இப்பதிற்றுப்பத்திற்கே உரிய தாகும்.

இந்நூலில் அமைந்துள்ள பத்துப் பகுதிகளையும் பாடிய புலவர் பதின்மர். ஒவ்வொரு பத்தும் ஒவ்வொரு சேர வேந்தரைப்பற்றிப் பேசுகிறது. ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் துறை, வண்ணம், துரக்கு, பெயர் எனப வற்றை விளக்கும் குறிப்புகள் அமைந்துள்ளன. துறை யின் பெயர் பிற தொகை நூல்களில் இருப்பினும், வண்ணம், தூக்கு, பெயர் என்பன அவற்றில் காணப்பட வில்லே. பதிற்றுப்பத்தில் உள்ள ஒவ்வொரு பாட்டிலும் பொருளாத் சிறப்புடைய தொடர் ஒன்றே அவ்வப் பாட் டின் பெயராய் அமைந்திருக்கும் அருமை எண்ணி