பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

意盟拿 ஆராய்ச்சிக் கட்டுரைகள்

ஒரே வழி அவை வட நாட்டினின்றும் போயிருத்த லும் ஒல்லும். ஆயினும் அச்சொற்கள் பெரிதும் தமிழ் வழக்குப் பெற்றுவிட்டமையானும், மலாயாவில் அங்கு வாழும் இந்திய இனத்தவருள் தமிழர் செல்வாக்கே பெரு மளவிற்று ஆதலாலும், தமிழ்-தமிழர்-வாயிலாகவே அச் சொற்கள் மலாய் மொழியை மருவி இருத்தல் இயற்கை எனவேதான் இச்சொற்கள் மேற்கண்ட பட்டியலில் இடம் பெறலாயின. இவ்வுண்மை முன்னரே சுட்டி காங்குத் தமிழ் வழக்கே பெருத பல வடமொழிச் சொற்கள் மலாய் மொழியில் இடம் பெற்றுள்ளமையை ஒப்பு நோக்குதலாலும் எளிதில் உணரலாம்.

மேலே உள்ள பலநூறு சொற்களுடைய பட்டியலில் அடே, ஆ, ஒ, கு-கு, சே ஆகிய ஐந்து சொற்களே உணர்ச்சி மொழி ஒலிக்குறிப்புச் சொற்கள். இவை தமிழில் இருந்துதான் மலாய் மொழிக்குச் சென்றிருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஆயினும் இருமொழி இனத்தார் உணர்ச்சி ஒற்றுமையின் வேரை இவை சுட்டும்.

செந்தமிழ்ச் சொற்கள் மலாய் மொழியில் சிவனும் போது பெறும் ஒலியின் மாற்றங்களை மொழியியல் கண் கொண்டு ஆராய்ந்து முடிவு காணல் இன்றியமையாதது. ஆயினும், மலாய் மொழியிலும் தக்க புலமையுடைய ஒருவரால் தனித்துச் செய்தற்குரிய ஆராய்ச்சி அது வாதலின் ஈண்டு அஃது இடம்பெறவில்லை.

அடுத்துக் கருதத்தக்கது மேற்கண்ட பட்டியலுள் இடம்பெற்றுள்ள சொற்களுள் நூற்றுக்கு மேற்பட்டவை தூய தனித்தமிழ் சொற்களேயாம். அவற்றின் வகை யும் தொகையும் தூய்மையும் தொன்மையும் வட்டாரப் பண்பும் பிறவும் ஆராய்ந்து மகிழ்தற்குரியன. சான்று சில காண்போம்: