பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岱

தமிழர் உலகுக்கு வழங்கியவை"

தமிழர் உலகுக்கு வழங்கிய தனிப்பெருஞ் செல்வங் களுள் தலைமை சான்றன. கடல்முத்துக்களும் கலேமுத்துக் களுமே ஆகும். இவ்வுண்மையை ஆராய்வதற்குப் பெருந் துணை புரியும் வைப்புக்களுள் (Sources) குறிக்கத்தக்கன, பழந்தமிழ் இலக்கியங்களும், அயலகத்தார் தமிழகம் பற்றி வரைந்து வைத்த குறிப்புக்களும், கல்வெட்டுக் களும், கிழக்கு மேற்கு நாடுகள் பற்றி எழுந்துள்ள கலை யாராய்ச்சி உரைகளுமே.

பழந்தமிழகம் உலகின் பிற பகுதிகளோடு ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பிருந்து கொண்டிருந்த தரைவழி-கடல் வழி வாணிபத் தொடர்பு அதன் பல்வளங்களும் பாரெங்கும் பரவுவதற்குப் பெருந்துணே புரிந்தது. பழந் தமிழகம் உலகின் பிற பகுதிகளோடு கொண்டிருந்த வாணிபத் தொடர்பின் வாய்மையைப் புலப்படுத்தவல்ல சான்றுகள் பல. தமிழ் இலக்கியத்துள்ளும் அயல்நாட்டார் குறிப்புக்களுள்ளும் புதைந்து கிடக்கின்றன. அவை பற்றிய ஒரு சில ஆராய்ச்சிக் கருத்துக்கள் வருமாறு:

இந்த நூற்ருண்டின் தொடக்கத்தில் பழந்தமிழர் பற்றி ஆங்கிலத்தில் எழுந்த தலைசிறந்த ஆராய்ச்சி நூல் பேரறிஞர் திரு. வி. கனகசபைப்பிள்ளே அவர்கள் ஆங் கிலத்தில் வரைந்தளித்த நூலே ஆகும். அண்மையில்

  • மார்ச்-1961-ஆண்டு வெளியிடப்பெற்ற பேராசிரியர் தெ. பொ. மீ. அவர்கள் மணிவிழா மலர்க் கட்டுரை,