பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芷亚剑 ஆராய்ச்சிக் கட்டுரைகள்

பழந்தமிழகம் உலகத்திற்கு வழங்கிய பண்டங்களின் மதிப்புப் பற்றி வரலாற்று ஆசிரியர்கள் கூறும் வாய்மை யினே இதுகாறும் பார்த்தோம். அடுத்துத் தமிழர் உலகுக்கு வழங்கிய முத்தினும் சிறந்த முத்தமிழ் பற்றிச் சிந்திப்போம்.

முத்தும் முத்தமிழும் தமிழர் உலகுக்கு வழங்கிய தனிப்பெருஞ் செல்வங்கள் என்னும் உண்மையை எண் ணும்போது, முத்தும் முத்தமிழும் என்ற தொடர் பயிலும் கம்பன் கவிதை நம் உள்ளத்தில் இன்பத்தேன் பாய்ச்சுகின்றது."

முத்தமிழின் மாண்பு பற்றிக் கற்ருரும் எண்ணி இன் புறச் செய்யும் அரிய கட்டுரை ஒன்றை இந்த மணி விழாவுக்குரிய நமது மதிப்பிற்குரிய பேராசிரியர் தெ. பொ.மீ. அவர்கள், பண்டிதமணி கதிரேசச் செட்டியார் அவர்கள் மணிவிழா மணிமலருக்கு அளித்துள்ளார்கள். ஒப்புயர்வற்ற அவ்வரும் பெருங்கட்டுரையின் உயிர் ஒலி வருமாறு:

ஆகவே, மனக்கருத்தின் அமைதியே இயற்றமிழ், இயற்கை வாய் ஒலியின் அமைதியே இசைத் தமிழ். மெய்யின் இயக்க விளக்கமே கூத்துத் தமிழ். இவ்வாறு உயிர் முற்திறத்தாலும் தன்னியல்பை வெளிப்படுத்தும் நிலையில் சிறப்பாக விளங்குவன முத்தமிழ7ம்.

இசை, இன்ப ஒலியும் துன்ப ஒலியுமாக எழக்காண் கின்ருேமாதலின், உணர்ச்சி நிலை அல்லது விருப்பாற்

2. கம்பராமாயணம்-ஆறுசெல். 53 . 3. . இக்கட்டுரையைப் பேராசிரியர் தெ.பொ.மீ. அவர்கள் தம் கட்டுரைத் தொகுதியாகிய, பிறந்தது எப்படியோ?. என்ற நூலுள்ளும் காணலாம்.