பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் உலகுக்கு வழங்கியவை 117

றலின் இயக்கம் எனலாம். மனக் கருத்தை விளக்கும் இயற்றமிழ் அறிவுநிலை அல்லது அறிவாற்றலின் இயக்கம் எனலாம். செயல் நிலை அல்லது செயலாற்றலின் இயக் கமே கூத்துத் தமிழாம்.

" வீட்டு நெறியெனும் மெய்யுணர்வே அறத்துப் பாவின் முடிபாதலின், அறம், அறிவு நிலையின் பயன் எனலாம். உலகில் மக்கள் அரசும் குடிகளுமாய் வாழும் வாழ்க்கையைக் கூறும் பொருட்பால் செயல் நிலையின் பயன் எனலாம். முடிந்த முடிபாம் இன்சத்துப்பால் உணர்ச்சி நிலையின் பயன் எனலாம். எனவே, முப்பாலும் முத்தமிழாக முடிகின்றன.

ణాళికి ఖిఖి ඌද්

அறியும் ஆன்ம'அறிவு குறை நீங்கி நிறைவாம் வீட்டு நிலையில், மெய்யறிவு நிலையாக எங்கும் நிறைந்த இறைவன் அடிப்படையான உண்மை நிலையாக விளங்க, மயங்கி நின்ற இருளுலகம் முற்றும் மாறி இன்ப நிலையாக விளங்க, இவ்வாறு இவை மூன்றும் ஒன்றித்து முதிர்ந்து பழுத்து முற்றி நிற்கும் முத்தி நிலையும், முத்தமிழ் நிலை தானே?

"இவ்வாறு உயரப் பறப்பதைவிட்டு மண்ணிற் றவழ்ந்து வரும்போது முத்தமிழ்க் கொள்கையின் பெருமை விளங்குகிறது. இக்காலத்துக் கல்வி அறிவுநிலை ஒன்றையே வளர்க்கின்றது. இதன் பயனகதி தலை கொழுத்து உள்ளம் வற்றி உடல் வாடி நிற்கின்ற மக்களையே காண்கின்ருேம். போரும் மூண்டெரிகின்றது. முத்தமிழ் நெறியே கல்வி, கற்றிருந்தால் முழுமன வளர்ச்சி பெற்ற சான்ருேர்களாய், தனக்கென வாழாப் பிறர்க்குரியாளராய் விளங்கியிருப்பர் அன்ருே?