பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f 18 ஆராய்ச்சிக் கட்டுரைகள்

'உண்மை, வாய்மை, மெய்ம்மை என்ற தனித் தமிழ்ச் சிறப்புச் சொற்கள் முத்தமிழின் இயல்பை விளக்க எழுந்தன போன்றமைந்துள்ளன. இன்பமாய்ப் பொங்கி அறிவாய் விளங்கும் உள்பொருளை உள்ளத்தா லும் வாயாலும் மெய்யாலும் வழிபட்டு அதுவாய் நிற்கும் முறை இதுவேயாகும். தூய மனத்தில் பொங்கி எழுந்தது இயற்றமிழ், தூய வாயின் முழக்கமே இசைத் தமிழ், தூய மெய்யின் இயக்கமே கூத்துத் தமிழ். இவை மூன்றும் உண்மைக்கு மாருக இருத்தலாகாது என்பது தமிழர் கண்ட முடிபு. இவற்றின் ஒன்றித்த வடிவமே 'முருகு' எனும் அழகாம். உணர்ச்சி நிலையின் அழகை யாவரும் அறிவர். கல்வி யழகே யழகு" என அறிவு நிலையையும் அழகாகக் கண்டனர் நாலடி பாடிய தமிழர். ஒழுக்கத்தழகு எனச் செயல் நிலை அழகினையும் அழகாகக் கண்டார் தமிழ்ப் பெரியார். கிரேக்கர்கள் உண்மை, அழகு, நன்மை என்பனவற்றைப் பொன்ன லான முக்கோணமாகப் பாராட்டி வந்தனர். உண்மை என்பது அறிவையும், அழகு உணர்ச்சியையும், நன்மை ஒழுக்கத்தையும் குறிப் பன வாக லி ன், அவையும் முத்தமிழ்க் கொள்கையை விளக்குதல் காண்க. ஆல்ை, கிரேக்கர்க்கு அவை குறிக்கோளாக விளங்கத் தமிழர்க்கு இவை கல்வி முறையாகி அன்னுருடைய வாழ்க்கையாய் விளங்கின......பரத நாட்டியத்திலும் பாவம் எனும் மனக் குறிப்பும் இராகம் எனும் இசையும் தாளம் என்பதும் ஒத்தியைதல் வேண்டும் என்றனர் வடமொழியாளர். முத்தமிழை வெவ்வேருகப் பிரித்துப் பேசிலுைம் , பிரிக்க முடியாதபடி ஒன்ரு மனக்கருத்தாய் அரும்பி, இசை யாய்ப் பூத்துக் கூத்தாய்ப் பழுத்து முற்றியபோதுதான் உயரிய வாழ்க்கையாய் இனிக்கக் காண்கிருேம்.

భg qభ ఇg