பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

置爱鲇 ஆராய்ச்சிக் கட்டுரைகள்

அது குறித்து வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ் நாடு என்று கவியரசர் பாரதியார் பாடியது, காருள்ளளவும் கடல் நீருள் ளளவும் பொய்யா மொழி அன்ருே?

முத்தையும் முத்தமிழையும் மிகு பழங்காலத்தி லேயே உலகுக்கு வழங்கிய தமிழர், பின்னுளில் மொழிச் செப்பத்தையும் கலைப்பண்புகளையும் உலகுக்கு வழங்கி புள்ளனர். இவ்வுண்மையைக் கிழக்காசிய நாடுகளில் பரவியுள்ள தமிழ நாகரிகம் பற்றி அறிஞர் பெருமக்கள் ஆராய்ச்சி உரைகளால் நன்கு உணரலாம். சான்ருகச் சிலவற்றை மட்டும் ஈண்டுக் காண்போம்:

மலாய் மொழியில் தமிழ் வழக்குச் சொற்கள் மலிந் துள்ளன. இவ்வுண்மையைப் பேராசிரியர் வி. ரா. இராம சந்திர தீட்சிதர் அவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1940-ஆம் ஆண்டு நிகழ்த்திய சங்கர பார்வதி நினைவுச் சொற்பொழிவில் அழகுறப் புலப்படுத்தியுள்ளார்கள். அவர்கள் கூறிய ஆங்கில வாசகத்தின் தமிழாக்கம் வருமாறு:

"மலேயாவின் மொழிகளை ஆராய்ந்தால், அவற்றில் மிகுதியான இந்தியச் சொற்களை-அதிலும் சிறப்பாகத் 5. இப்பொருள் பற்றிக் கற்கத்தக்க சிறந்ததொரு நூல் பேராசிரியர் கே. ஏ. நீலகண்ட சாத்திரியாரின் South Indian influences on Seuth East Asia [1949; Graśr 135TCŞth.

6. [i]. Origin and Spread of Tamii-V. R. R. Dikshitar

(1947] р. 9. (1) மலாய் மொழியில் வழங்கும் தமிழ் வழக்கும் சொற்கள் பற்றிய விரிவான பட்டியலுக்குச் கட்டுரைக்கும் பார்க்க.--மலாய்மொழியில் தமிழ் வழக்குச் சொற்கள்-ந. சஞ்சீவி. —Annals of Oriental Research University of Madras.

Voiume XVI—(1959.60] Part 2.

(i) இந்நூலில் இரண்டாவது கட்டுரை.