பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் உலகுக்கு வழங்கியவை 星露莎

யவனர்களாகிய கிரேக்கர்கள் காவிரிப்பூம்பட்டினம் போன்ற தமிழ் நாட்டுத் துறைமுகங்களுக்கு வந்து வியாபாரம் செய்தனரென்றும் தமிழ் நூல்கள் கூறுகின் றன.

பண்டைக் காலத்தில் கிரேக்க நாடு, ரோம் நாடு போன்ற மேல் நாடுகளுடன் தமிழ் மக்கள் கொண்ட வாணிகத் தொடர்பு மிகவும் சிறந்தது என்பதற்குச் சங்க இலக்கியங்களும் சிலப்பதிகாரமும் நல்ல உறுதி படைத்த ஆதாரங்களாய் அமைகின்றன. அரிசி, இஞ்சி வேர்,கருவாப் பட்டை போன்ற தமிழ்ச்சொற்கள் கிரேக்க மொழியில் உள்ளன, ஆயினும், Paleography, Paleontology போன்ற சொற்களில் வரும் பழைய' என்னும் பகுதி யும், இக்காலக் கிரேக்க மொழியில் நீருக்கு, நேரோ என்னும் சொல்லும், இன்லும் நாம் கிரேக்கம் பேரன்இ பண்டைய மொழிகளில் ஆய்வு செய்வதற்கு இடமுண்டு என்பதைக் காட்டுகின்றன. கிரீட்டுத் தீவின் பண்பாட் டில் காளே மாட்டின் வழிபாடும், ஏறு தழுவுதல் போன்ற விளையாட்டுக்களும், கி. மு. இரண்டாயிரத்திற்கு முன் நிலவிய மினேஸ் காலத்தின் பண்பாட்டில் இடம் பெற் றுள்ளன. இன்றும் செட்டி நாட்டில் இடம் பெறும் விளை யாட்டும், முல்லைக்கலி கூறும் ஏறு தழுவுதலும் தமிழர் கிரீட்டரின் பண்டைத் தொட பினக் காட்டுகின்றது என்பது அறிஞர் சிலரது முடிபு."

"தமிழ் நாட்டிற்கு வடமேற்குத் திசையிலிருக்கும் நாடுகளிலும் தமிழ் ஆராய்ச்சிக்கு எல்லேயற்ற இடமுண்டு. இன்றுவரையிலும் நாம் அறிந்த பண்புள்ள பண்பற்ற் திராவிடமொழிகள் ஏறக்குறைய இருபது என்று கூறுவர்.

14. அருட்டிரு. டாக்டர் தனிநாயக அடிகள்: தமிழ்த் துரது பக். 123.