பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f 2:5 ஆராய்ச்சிக் கட்டுரைகள்

மொகஞ்சதரோவை நான் பார்க்கப் போயிருந்த பொழுது, அங்கே பிராகுவி மொழி பேசும் மாந்தர் சில ருடன் உரையாடினேன். பாகிஸ்தானத்தில் கிணறு தொடும் குலத்தினர் ஒரு சிலர், ஒட்டர் எனப்பெயரிடப் பெறுவர் என்றும், அன்னர் திராவிட மொழி போன்ற ஒரு மொழியைப் பேசி வருகின்றனர் என்றும் என்னிடம் கூறினர். நான் ஒட்டர்’ எனும் மக்களை நேரில் கண்டு அவர்களுடன் பேசுவதற்குரிய வாய்ப்பினைப் பெற்றி லேன். அண்மையில் மாஸ்கோ மாநகரில் ஆப்கானிஸ் தானத்திலிருந்து வந்த ஆங்கில அறிஞர் ஒருவருடன் உரையாடியபொழுது, அவர் ஆப்கானிஸ்தானத்தில் ஒரு வகுப்பினர் (ஏறக்குறைய 200 குடும்பங்கள்) திராவிட மொழி போன்ற மொழி ஒன்றினைப் பேசி வருகின்றனர் என்றும், இதுகாறும் அம்மொழியினை அறிஞர் எவரும் ஆராய்ந்திவர் என்றும் செப்பினர். எனவே, நம் அறிஞர் கள் இந்நாடுகளுக்குச் சென்று இம்மொழிகளைப் பேசும் மக்களைப் பற்றிய செய்திகளை ஆய்ந்து வருவார்களாயின், இன்னும் சில திராவிட மொழிகள் இயங்கி வருவதாக நாம் அறிய நேர்ந்தாலும் நேரலாம்.

பின்னிஷ் (Finnish) மொழி திராவிட மொழிகளு டன் தொடர்புடையது எனக் கால்டுவெல் முன் கூறியுள் ளதை மீண்டும் ஆக்ஸ்பொர்டு பல்கலைக் கழக அறிஞர் பரோ (Burrow) என்பவர் இக்காலத்திலும் வற்புறுத்தி வருகின்ருர்.'

இச் செய்திகளுடன் நாம் கருதத்தக்க மற்ருெரு சிறந்த செய்தி அமெரிக்காக் கண்டத்தில் குறிப்பாக மெக்ஸிக்கோ-மாயா நாகரிகத்தில் கிழக்காசிய நாடுகள்

15. அருட்டிரு டாக்டர் தனிநாயக அடிகள்: தமிழ்த் துரத்து பக். 12:1-122. -