பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் உலகுக்கு வழங்கியவை 127

வழியாகச் சென்ற தமிழர் நாகரிகம் ஊடுருவிய பேருண் மையைப் பற்றியதேயாகும். இது பற்றிய வியத்தக ஆராய்ச்சிக் குறிப்புகள் சில வருமாறு:

அருட்டிரு-டாக்டர் தனிநாயக அடிகளார் தமது "தமிழ்த்துரதில் தெரிவிப்பது :

"தென்னமெரிக்காவிலோ, பண்டை நா. க ரி கம் படைத்தவரும் பழங்குடிகளுமான இலத்தீன் வழித் தோன்றல்கள், இந்தியாவின் பெருமையை நன்ருய் அறிந்திருப்பதாகத் .ெ த ரி ந் த து . இ. ல த் தீ ன் அமெரிக்க நாடுகளில் பழைய நாகரிகங்கள் அரும்பி மலர்ந்து வாடின. மெக்ஸிகோவில் அல்தெக்கரும், தேல்தெக்கரும், பெருவில் இன்காக்களும், வரலாற்று நூல்களில் பெயரும் புகழும் பெற்ற மக்கள். அவர் களுடைய கோட்டைகளையும் மாளிகைகளையும் நான் கண்டபோது, திராவிட மக்களின் கட்டடத்திறன் என் நினைவிலே தோன்றியது. இவர்கள், இத்திறனில் கட் டடக் கலைஞருடைய வியப்பையும் புகழையும் பெற்றவ ராயினும், இலக்கிய நூல்களை யாத்தவர்களல்லர். இப் பண்டை நாகரிகங்களுடன் தமிழ்ப் பண்பு நிலையைப் பிணைத்துப் படித்து ஆராயச் செய்வதும், தமிழாராய்ச் சியின் புதியதொரு துறையாகும்.'

සෟථ ○む ෆඝ.

16. () அருட்டிரு-டாக்டர். தனிநாயக அடிகள்: "தமிழ்த்துாது (1962)-பக்கம்-22;

(i) இப் பொருள்பற்றிய விளக்கப் படங்களுடன் கூடிய விரிவான ஆராய்ச்சி காண விரும்புவார், chaman Lai-Hindu America (1960) பார்க்க. இந்நூலிலிருந்து எடுக்கப் பெற்ற ஒரு சில இன்றியமையாக் குறிப்புகட்கு மட்டும் பார்க்க: பிற் சேர்க்கை iii.