பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盖&岛 ஆராய்ச்சிக் கட்டுரைகள்

தமிழ் மக்கள் மொழி, இலக்கியம்,கலை, சமயம் ஆகிய துறைகளில் மட்டுமேயன்றி, விஞ்ஞானத் துறையிலும் உலகிற்குப் பெரிய அறிவுக்கொடை வழங்கியுள்ளனர் என்ற உண்மை, மொழி-சாதி-இனப்பற்றுகளைக் கடந்த உள்ளத்தின் ஆராய்ச்சிக்குத் தெள்ளிதின் புலனுகும். சான்ருக, விஞ்ஞானக் கலைகள் அனைத்திற்கும் வேராய் விளங்குவது கணக்குக்கலை. அக்கலையின் உயிராய்த் திகழ் வது இலக்கமுறை. இன்று உலகெங்கும் பரவியுள்ள இலக்க முறைக்கு வித்திட்ட மரபு நம் தாய்க்குலமாம் தமிழ்க் குலத்தின் தனி மரபேயென்று கடந்த பல்லாண்டு களாகவே அறிஞர் பெருமக்கள் ஆராய்ந்து கூறியுள் Gortyffé53}r.”

அவற்றுள் ஈண்டு மேற்கோளாக எடுத்துக் காட்டத் தக்க அரியதொரு விளக்கக் குறிப்புப் பேராசிரியர் மு. வரதராசனர் அவர்களின் மொழி வரலாறு என்னும் நூலின் மணிமுடி போலத் திகழும் முடிவானதொரு மணிவாசகமே ஆகும். அது வருமாறு:

1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 என இன்று உலகமெங்கும் எழுதப்படும் எண்கள் அரபி எண்கள் எனக் கூறப்படு கின்றன. ஆளுல் அரபியர்களுக்கு இந்த எண்களின் பழைய வரலாறு பற்றி ஒன்றும் தெரியவில்லை; அவர்கள் இவற்றை இந்திய எண்கள் என்கிருர்கள் வடநாட்டு அறிஞர்களுக்கும் இவற்றின் தோற்றம் பற்றி ஒன்றும் விளங்கவில்லை. தமிழ்நாட்டின் பழைய எண் வடிவங் களைப் பற்றி இவர்கள் அறியாமலிருத்தலே இவ்வாறு அனைவரும் தடுமாறுவதற்குக் காரணம் ஆகும். அரபி

17. () தமிழ் இலக்க வரலாறு ஆ. முத்துத்தம்பிபிள்ளை. செந்தமிழ்’, மூன்ரும் தொகுதி-பக்கம் 149 (i) தென்மொழி கா. அப்பாதுரை-பக்கம் 100-1199