பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# ஆராய்ச்சிக் கட்டுரைகள்

கெளதமஞர் பாடல்களாலும், அவற்றைத் தொடர்ந்து அனுமந்துள்ள பதிகத்தாலும், ஒருவாறு நாம் உணர இயல்கின்றது.

எண்ணிலடங்கசச் சேரவேந்தர்களுள் வரலாற்றுப் புகழ் வாய்ந்த முதற்பெரு வேந்தனய் நமக்குக் காட்சி அளிப்பவன் உதியன் சேரலாதனே ஆவ்ன். பாரதப் போகில் இருதிறப் பெரும்படைகளுக்கும் அப்போர் முடியும்வரை பெருஞ்சோறு அளித்து அழியாப் புகழ் கொண்ட வேந்தன் இவனே என்று அறிஞர் பாராட்டு வர். அத்தகைய பெரும்புகழ் வாய்ந்த உதியன் சேரலாத லுக்கு வெளியன் வேண்மாள் நல்லினி வாயிலாகப் பிறந்த மைந்தர் இருவராவர். அவருள் மூத்தோன் இமய

பல்யாணச் செல்கெழுகுட்டுவன். இச்செய்திகள்,

“மன்னிய பெரும்புகழ் மறுவில் வாய்மொழி

இன்னிசை முரசின் உதியஞ் சேஏற்கு வெளியன் வேண்மாள் கல்லினி ஈன்ற மகன்

இமையவரம்பன் நெடுஞ்சேர லாதன்." "இமைய வரம்பன் தம்பி அமைவர

பல்யாணச் செல்கெழு குட்டுவன்."

(உ.திந்துப்பத்து, பதிகம்:2,3) எனவரும் பாடற் பகுதிகளால் இனிது விளங்கும்.

பல்யானைச் செல்கெழுகுட்டுவன் உதியன் மரபின் புகழ் விளங்கத் தோன்றிய முன்ஞேர்களுள் ஒருவன்; நிகரற்ற வீரத்திருவினன்; கொடை வளம் மிக்கவன்; கல்வி கேள்விகளாற் சிறந்து மெய்யுணர்வு நிரம்பப் பெற்றவன். இவ்வுண்மைகள் யாவும் இவன் புகழ் பாடும்