பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#3; ஆராய்ச்சிக் கட்டுரைகள்

நண்பர் திரு. இரா. முத்துக்கிருட்டிணன் அவர்கள், இப் பழங் கணக்கியல் முறையைப் பயிற்றுவிக்கும் திண்டுக் கல் அங்கு இங்குப் பழைய முறைப் பள்ளிக்கூடம் பற்றிய செய்திகளைச் சொல்லிய போது, யான் அடைந்த மகிழ்ச்சிக்கு ஒர் அளவு இல்லை.

கணக்கியல் கலையில் வல்லுநராய் விளங்கியமை போலவே, கடற் பயணக் கலையிலும் பண்டுதொட்டே விளங்கிய தமிழ் மக்கள், நிலவரைப் படங்கள் வரைவதி லும் வல்லுனர்களாய்த் திறமை பெற்றுத் திகழ்ந்த உண்மை, தாம் படித்த ஒரு நூலில் பொறிக்கப் பெற் நிருந்த தித்திக்கும் செய்தியை ஆராய்ச்சி அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள், இக் கட்டுரைப் பொருள் பற்றி அளவளாவிக் கொண்டிருந்தபோது அன்புடன் எனக்குத் தெரிவித்தார்கள்.

விஞ்ஞானத்திற்குத் தொண்டாற்றியது போன்றே தமிழர் மெய்ஞ்ஞானத்திற்கும் பணி புரிந்தனர். சிறப் பாகச் சைவ சித்தாந்த நெறி அவர்கள் உயிருகர்வு (ஆன்மீக) உலகிற்கு வழங்கிய பெருங்கொடை ஆம். நீலமேனி வாலிழை பாகன் சிவசக்தியாய் விளங்கும் தத்துவம் சீனநாட்டு இலச்சினைகளிலும் இடம் பெற் றிருப்பதை, நீலமும் சிவப்பும் கலந்திருக்கும் அவ்விலச் சினைகளைக் காட்டி 1950-இல் யான் சிங்கப்பூர்த் தமிழர் சபையார் வேண்டுகோட் கிணங்கித் தமிழர் திருநாள் சொற்பொழிவாற்ற மலாயாவிற்குச் சென்றிருந்த போது, சுவாமி சத்தியானந்தர் தமது கோலாலம்பூர் ஆச்சிரமத் தில் வைத்து விளக்கியருளினர்.

தமிழர் உலகுக்கு வழங்கிய தனிப்பெருஞ்செல்வங்கள் பற்றி நம்மவர் பலர் நவில்வதினும் அயலவர் ஒருவர் நடுவு நிலையோடு ஆய்ந்து கூறுவதே பெரு மதிப்பிற்கு