பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் உலகுக்கு வழங்கியவை 133

உரியது. அவ்வகையில் செக்கு நாட்டுச் செந்தமிழ்ப் பேராசிரியரும் இந்நூலுக்கு அணிந்துரை வழங்கிப் பெருமை செய்துள்ள அறிஞர் பெருந்தகையுமாகிய டாக்டர் கமில் கவிலபிலின் அவர்கள் தமிழ் கல்சர்’ (Tamil Culture) முத்திங்கள் இதழில் ஏழு ஆண்டுகட்கு முன்பே (அக்டோபர் 1956) எழுதியுள்ள கட்டுரையொன் றில், தமிழர் உலகுக்கு வழங்கிய ஏழு பெருஞ்செல்வங் களைப் பற்றிக் குறித்திருப்பது நினைவில் இருத்தத்தக்கது. செக்குப் பேராசிரியர் கருத்துக்கள் வருமாறு:

உலகப் பண்பாட்டுக் களஞ்சியத்திற்குத் தமிழர்தம் படைப்புப் பெருந்திறம் வழங்கிய பெருங் கொடைகளுள் குறிக்கத்தக்கன பின்வரும் கலை இலக்கியச் செல்வங்க ளாகும். இவை, ஹோமரின் பாடல்கள், ஷேக்ஸ்பியரின் நாடகங்கள், ரெம்பிராண்டின் ஒவியங்கள், பிரான்சின் கோயில்கள், கிரீசின் சிற்பங்கள் போலவே மன்பதை முழுதும் நன்கறிந்தனவாக வேண்டும்; எல்லோராலும் போற்றிக் காதலிக்கப் பெறவேண்டும்.

1. எட்டுத்தொகைப் பாடல்கள்

இவ்விலக்கியத் தொகுதி ஆற்றலும் தனிச் சிறப்பும் வாய்ந்தது; விரிவான மெய்ம்மையியல் நிரம்பியது; திறமை துலங்க இயற்றப் பெற்றது. எனவே, ஒருவேளை இப்பாடல்கள் பழைய கிரேக்க இசைப் பாடல்கள் சிலவற்ருேடு மட்டுமே ஒப்பிடத்தக்க ஒண்மையுடையது.

2. திருக்குறள்

இது உலகின் பெருநூல்களுள் ஒன்று. உடன்பாட்டு வகையில் அன்பையும் மன்னிப்பையும் அமைதியையும்