பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் உலகுக்கு வழங்கியவை Å33

இவ்வெழுவகை வேறுபட்ட வீறுடைய கொடை வகைகளைப் பெருமல் இருந்திருப்பின், இந்த உலகம் உறுதி யாக வறுமையும் வாட்டமுமே அடைந்திருக்கும். எனவே தமிழ்ப் பண்பாட்டில் ஆர்வமுடைய அனைவராலும், இவ் வெழுவகைச் சிறப்புகளும் கவனிக்கப்படுதல் வேண்டும். அவர்கள், தமிழ்ப் படைப்புப் பெருத்திறனின் உச்சி களாய் விளங்கும் இச்சிறப்புகளை உலகம் முழுதும் நன்மு கவும் நெருக்கமாகவும் உணரத் தங்கள் காலத்தையும் முயற்சிகளையும் காணிக்கையாக்க வேண்டும்.

இக்கருத்துகளையே பேராசிரியர் அவர்கள் பான் அனைத்திந்திய வானுெவி வாயிலாக 28-10-62-இல் சென்னை நிலைய வானெலி மன்றத்தில் பேட்டி கண்ட போதும் வற்புறுத்தினர்கள்.

தொன்று தொட்டு இன்று வரை எத்தனை எத்தனை யோ வகைகளில் மன்பதையை மாண்புறுத்தும் தமிழினம், தான் கடந்த இரு நூற்ருண்டுகளில் ஆசியஆப்பிரிக்க நாடுகள் பலவற்றிற்கும் வழங்கியுள்ள மனித உழைப்புக் கொடையின் மதிப்புப் பெரிது; மிகப் பெரிது. இவ்வுண்மையை ஒரு நூறு ஆண்டுகட்கு முன்பே உணர்ந்து கூறிய பெரியார் டாக்டர்-கால்டுவெல் அவர் களே. அவர் வாசகம் வருமாறு'.

‘ஈழநாடு முழுவதிலும் உள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளிகள் அனைவரும் தமிழர்களே.

"பெகு பிளுங்கு சிங்கப்பூரிலும், தொலை கிழக்கு நாட்டில் உள்ள பிற இடங்களிலும் வாழும் இந்துக்களில் பெரும் பிரிவினர் தமிழரேயாவர். மேற்கிந்தியத் தீவுக ளுக்குக் கூலிகளாக, மிகப் பெருந்தொகையில் குடியேற்

19. (iii) Dravidian Comparative Grammar (1956) pp.–7.