பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிற்றுப்பத்துள் மூன்ரும் பத்து 尋

பாலக் கெளதமஞர் பாடல்களாலும் மூன்ரும் பத்திந் குரிய பதிகச் செய்யுளாலும், அதைத்தொடர்ந்து அமைத் துள்ள உரைநடைப் பகுதியாலும், சான்ருேர் பிறர் வாக் காலும் தெள்ளிதிற் புலனுகும். போர்க்களத்தில் மாற் முர்க்கு அஞ்சாது முன்னின்று போர் உடற்றிப் பகை வர்தம் கொள்ளற்கரிய அரண்களே அழித்து வெற்றிதரும் விறல்மிக்க யானைகள் பல கொண்ட பெரும்படை உடை மையால், இச்சேரன் பல்யானைச் செல்கெழு குட்டுவன்’ எனப் போற்றப்பட்டான். இவ்வுண்மையை, அமர்கோள் நேரிகழ்ந்து ஆரெயில் கடக்கும் பெரும்பல்யானைக் குட்டு வன்’ என்ற பதிற்றுப்பத்து அடிகள் வலியுறுத்துகின்றன. பல்யானைச் செல்கெழுகுட்டுவன் என்பதற்குப் பல யானை களாகிய மேகத்தையுடைய குட்டுவன்' என்று பொருள் விரிப்பர் பேராசிரியர் மு. இராகவையங்கார்.

3. பாலேக் கெளதமஞர்

பாலைக்கெளதமனர் பல்யானைச் செல்கெழு குட்டு வனைப் போற்றிப் பாடியுள்ள மூன்ரும் பத்துச் செயயுள் கள் யாவும் தித்திக்கும் கரும்பனைய சொற்கவையும் பொருட்சுவையும் மிகுதியாக உடையனவாகும். பாலைக் கெளதமஞர் குட்டுவனது அரசவையில் நெடுங்காலம் இனிது உறைந்து அவன் அன்பையும் ஆற்றலையும் நன்குணர்ந்த பெரியார் என்பது அவர் பாடல்களை உணர்ந்து கற்பார் உள்ளத்திற்குப் புலகைாமற்போகாது. பழம் பெருஞ்சேரவேந்தளுகிய பல்யானைச் செல்கெழு குட்டுவனது பெருவரலாற்றை ஒருவாறேனும் நாம் இன்று உணர்ந்து இன்பக்களி எய்தத் துணைபுரியும் பாடல்கள்

1. சேரவேந்தர் செய்யுட்கோவை முதல்தொகுதி, பக்கம்,10.