பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#44 ஆராய்ச்சிக் கட்டுரைகள்

என்ற வடசொல்லாலும், Essay' என்ற ஆங்கிலச் சொல்லாலும் கருதப்படும் பொருளே உணர்த்தும் தன்மையைப் பிற்காலத்தே பெற்றிருக்க வேண்டும். அதன்பின் தமிழிலக்கியத்தில் கட்டுரைக்கலை இன்று நாம் போற்றும் வடிவத்தில் உருப்பெற்றது ஐரோப்பியப் பாதிரிமார்களின் தமிழக வருகைக்குப் பின்பே. தமிழ் உரைநடை அறப்பழமை வாய்ந்ததுதான். கிரேக்க மொழியைப் போன்றே தமிழ் மொழியும் பழமையாகவே உரைநடையைப் பெற்றிருக்க வேண்டும் என்னும் உண்மையைத் தமிழ் உரைநடை என்னும் நூலில் பேராசிரியர் உயர்திரு. ஆ. மு. ப. அவர்கள் அழகுற விளக்கியுள்ளார்கள். ஆயினும், முற்றிலும் உரைநடை யால் இயன்ற தமிழ் நூல்கள்-இன்று நாம் கருதுவது போன்ற உரைநடை நூல்கள்-பழங்காலத்தில் இருந்தன வாகத் தெரியவில்லை. உரை நடையிட்ட பாட்டுகளும் இலக்கிய இலக்கணப் பாக்கட்கு எழுந்த உரைநூல்களுமே பழந்தமிழ்ப் பெட்டகத்தில் இன்று நாம் பார்ப்பன.

முற்காலத் தமிழ் உரைநடை என்று எண்ணும்போது, நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் செய்த இளங்கோ அடிகளேயும், இறையனர் அகப்பொருளுக்கு உரைகண்ட தக்கீரரையும் நன்றியுடன் நினைக்க வேண்டியுள்ளது. பழந்தமிழ் உரை நடையை அதன் தனிச் சிறப்பு வாய்ந்த வடிவத்தில் காண இயல்வது சிலப்பதிகாரக் காவியத்தி லேயே ஆகும். ஆனல், சங்க காலத்தில் ஒலி வடிவம் பெற்று ஏறத்தாழ எட்டு நூற்ருண்டுகள் எழுத மறை யாய்ப் பழந்தமிழ்ப் புலமை பாலிக்கப் பெற்றவர்களால் போற்றப்பெற்றுப் பின்னர் வரி வடிவம் கண்ட தமிழ்

28. An introduction to the study of Literature (1946)

p. 331. 29. தமிழ் உரை நடை, பக். 39-42