பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரைக் கலை 147

சுருக்கமாகத் தெரிந்து கொள்ளப் பேராசிரியர் உயர்திரு அ. ச. ஞானசம்பந்தம் அவர்கள் கலைக்களஞ்சியக் கட்டுரை பெரிதும் பயன்படும்."

இந்நிலைகளே எல்லாம் கடந்து தமிழ் மொழியில் கட்டுரைக்கலை தனி வடிவும் தனிச்சிறப்பும் பெறத் தொடங்கியது ஐரோப்பியப் பாதிரிமார்களின் தமிழக வருகைக்குப் பின்பே. அக்காலம் பற்றி ஆராய்ச்சி அறிஞர் உயர்திரு. மயிலே சீனி-வேங்கடசாமி அவர்கள் "கிறிஸ்தவமும் தமிழும் என்ற தமது நூலில் தெளிவு பெறக் கூறியுள்ள பகுதி வருமாறு :

"தமிழில் தனி வசன நூல் ஐரோப்பியரால் முதல் முதல் உண்டாக்கப்பட்டது என்பது மறுக்க முடியாத உண்மை. எப்போது, யாரால், என்ன வசன நூல் முதல் முதல் உண்டாக்கப்பட்டது என்பதை இங்கு ஆராய் வோம்: பதினெட்டாம் நூற்ருண்டின் முற்பகுதியில், தமிழ் நாட்டில் வந்து வாழ்ந்திருந்த இத்தாலித் தேசத் தவரான டெஸ்கி என்னும் வீரமாமுனிவர்தாம் தமிழில் முதல்முதல் வ ச ன நூ ல் இயற்றினவர் என்பது பெரும்பான்மையோர் கருத்து என்ருலும், இது தவருண முடிபாகும். வீரமாமுனிவருக்கு முன்னரே, பதினேழாம் நூற்ருண்டில் தமிழ் நாட்டில் வந்து வாழ்ந்திருந்த இத்தாலித் தேசத்தவரான இராபர்ட்டு நொபிலி என்னும் தத்துவ போதக சுவாமியைப் பற்றி அனேகருக்குத் தெரியாது. வீரமாமுனிவருக்கு முன்னரே இவர் தமிழ் வசன நூல்கள் இயற்றியிருக்கிருர் என்ரு லும், இவரைத் தமிழ் வசன நூலின் தந்தை' என்று சொல்வதற்கில்லை. ஏனென்ருல், இவருக்கும் முன்னரே

34. கலைக் களஞ்சியம்-தொகுதி-3 பக், 42-3