பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரைக் கலை 74g

"கசு-ஆம் நூற்ருண்டிற்குப் பிறகு, மேலே சொல்லிய படி கன-ஆம் நூற்றண்டில், ராபர்ட் நொபிலி என்னும் தத்துவ போதக சுவாமி, சில வசன நூல்களை எழுதினர். இந்த நூற்ருண்டில் இவரைத் தவிர அருளானந்தர் என்னும் பெயருள்ள ஜான்-டி-கிரிட்டோ பாதிரியார் சில வசன நூல் களைத் தமிழில் எழுதியிருப்பதாகத் தெரிகிறது. ஆனல், அருளானந்த சுவாமி எழுதிய நூல்கள் எமக்கு இதுவரை கிடைக்கவில்லை.

'அதன் பிறகு கஅ-ஆம் நூற்ருண்டில் பெஸ்கி என்னும் வீரமாமுனிவர் சில வசன நூல்களை இயற்றி யிருக்கின்ருர். இவர் காலத்திலே, தஞ்சைக்கடுத்த தரங் கம்பாடியில் வாழ்ந்திருந்த லீகன்பால்கு முதலான ஜெர் மனித் தேசத்துப் பாதிரிமார்களும் சில வசன நூல்களே இயற்றியிருக்கின்றனர். இதே நூற்ருண்டில்தான் திருவா வடுதுறையாதீனத்தைச் சேர்ந்த பூரீ மாதவ சிவஞான் சுவாமியும் சில வசன நூல்களை இயற்றினர்.”

இவ்வாறு சங்ககாலத்தில் அருவியாய்ப் பிறந்து, சமயகாலத்தில் ஆருய்ப் பெருகி, சமுதாய காலமாகிய கடந்த இரு நூற்ருண்டுகளில் பொதுவாகத் தமிழ் உரை நடையும், சிறப்பாகக் கட்டுரைக் கலையும் கடலாய்ப் பொங்கத் தொடங்கி ய காலம் பத் தொன்பதாவது நூற்ருண்டே ஆகும். இவ்வுண்மையை யும் ஆசிரியர் திரு மயிலை, சீனி, வேங்கடசாமி அவர்கள் தமது "கிறிஸ்தவமும் தமிழும் என்னும் நூலில் ஐயத்திற்கிடமின்றிக் குறிப்பிட்டுள்ளார்கள். அவர்கள் கருத்து வருமாறு."

"தமிழ் வசன நூல் முதல் முதல் தோன்றியது கசு-ஆம் நூற்ருண்டில் என்ருலும், அது வேரூன்றி நிலை பெற்று வளரத் தொடங்கியது சென்ற ககூ-ஆம் நூற்

36. கிறிஸ்தவமும் தமிழும் (1936), பக், 24-5,