பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரைக் கலை ፱፻፰

'காயமே கோயில் :

"கிழக்கு-முகம், மேற்கு-கால், வடக்கு வலது கை: தெற்கு-இடதுகை, கொடிமரம் தொப்புள், கொடிமரத் தின் அளவு-உள்நாக்கு, பலிபீடம்-வயிற்றின்மேடு, நந்திஆணவம் முதலிய மலங்கள் உள்ள பசு, சிவலிங்கமே மூலா தாரத்தின் உள்ளங்கம்.

"பூர்வ ஜென்மம் உத்தர ஜென்மம்'

"பூர்வ ஜென்மம் என்பது - கர்ப்பகோள வாசம். "உத்தர ஜென்பம் என்பது - ஜனன காலம்.

'கடவுள் மனித தேகத்தில் காரியப்படுதல் :

'கடவுள் ஆன்ம வியாபகமாகிய மனித தேகத்தில் காரியப்படுவது உத்தமமாக இருக்க, சிலர் விக்கிரக யூத தாரு முதலியவைகளில் கடவுளை வெளிப்படுத்திக்கொள் வது மந்த ஞானம், அதில் கடவுள் தோன்றி, அனுக்கிரகிப்ப தாகச் சொல்வது ஜாலம், காய்ந்த கட்டையினிடத்தில் அக்கினி அதிசீக்கிரம் பற்றுதல் போல், பக்குவர்களாகிய ஜீவர்களிடத்தில் கடவுள் அருள் வெளிப்பட்டால், சுத்த மாதி மூன்று தேகசித்தியும் அத்தருணமே வரும். பக்குவ மில்லாதவர்க்கு அருள் செய்தாலும், வாழையினிடத்தில் அக்கினி செல்வது போலவாம். ஆதலால், கடவுள் அருள் வெளிப்படுவதற்குமுன் அபக்குவர்கள் தங்கள் செயற்கை யாகிய ராகத் துவேஷாதி அசுத்தங்களைப் போக்கிக் கொள்வது உத்தமம்."

இராமலிங்கரை அடுத்துத் தமிழ் உரை நடையில் கட்டுரைக் கலையைச் சிறப்புற வளர்த்த பெருமை ஆறுமுக நாவலர் தனியுரிமை. சிறப்பாக அவர் வரைந்தருளிய பாலபாடம் நான்காவது புத்தகம், அவர் வளர்த்த கட்டுரைக் கலேக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.இவ்வுண்மையைத்