பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரைக் கலை 161

"தன்னல மேலீட்டான் வெளிவரும் போலிச் சந்தி யாசிகள் எழுதி வைத்துள்ள நூல்களை நம்பி உலகம் மோசம் போதலாகாது. இவர்கள் என்னென்னவோ எழுதி வைத்திருக்கிருர்கள்! இவர்களின் குணம் குற்றம் ஒராது, பெண்ணுடன் வாழும் புனிதர்கள் இவர்கட்குச் சோறிடவேண்டுமாம், கூறையளித்தல் வேண்டுமாம். இப் பெரியோர்கள் நிஷ்டையில் திளைத்துக் கொண்டிருக் கும் வேளையில் இவர்கட்குச் சிற்றின்ப நினைவு தோன்றி னுந் தோன்றுமாம்! தோன்றுமேல் அந்நினைவைக் கழித் துக் கொள்ளச் சுவாமிகள் வரைவின் மகளிரில்லம் போந்து துயில் நீத்துப் பின்னே நிஷ்டை கூடுவார் களாம்! இந் நிஷ்டாபரணர் பொருட்டு மன்னரும் மற்றவரும் காமச் சத்திரங்கட்டி நடத்துவது அறமாம்: அந்தோ அந்தோ உலகம் எப்படி ஏமாற்றப்பட்டது: ஏமாந்த உலகமே இன்னுமா ஏமாறுவை? ஏமாந்தது போதும்! போதும்!

Ꮌ Q పోర C#}

"தமது நலத்துக்கெனப் பெண்ணே வெறுக்கும் போவித் துறவோரால், பெண்ணை வேண்டுமென்றே வெறுத்துத் தள்ளாது உயிர்கள்மீது கொண்ட இரக்கத் தaல் தொண்டுக்கென வெளிவரும் அறவோர்க்கும் இவ் வுலகில் இன்னல் விளைகிறது. இருவருக்கும் புறத்தே வேற்றுமை காண்டல் மிக அரிதாயிருக்கிறது. தொண்டில் குறிக்கொண்டு தனித்து வாழும் அறவோர் திருவடி எனது முடியணி என்று ஈண்டு அறிக்கை செய்கி றேன். அத்தகைத் தொண்டர் இந்நாளில் மிக அரியர், அரியர்."

தமிழ்ப் பெரியார் திரு. வி. க. அவர்கள் வாழ்ந்த நாளில் வாழ்ந்து, கட்டுரையால் மட்டுமன்றி, கள்ளும் தியும் காற்றும் கலந்த கவிதையாலும் நாட்டுப்பற்றை

ஆ~11