பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரைக் கலை శ్ర

இவ்வாறு தமிழ் மொழியிற் கட்டுரைக் கலை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளரச் செய்த பெருமக்களுள் பலர் மறைந்துவிட்டனர். அப் பெருமக்கள் வரிசையில் தோன்றிக் கட்டுரைக்கலை’ மேலும் பல புதுமைகளையும் பெருமைகளையும் பெறத் தம் வாழ்வைப் பயன்படுத்தி வரும் நல்லறிஞர்-அத் துறையில் மறைந்தோரினும் பலராய் இன்று நம் மிடையே மண்டியிருப்பவர்-எத்தனையோ பேர். அவர் களைப் பற்றியெல்லாம் மின்னல் வேகத்தில் குறிப்பிடுதற் கும் இக்கட்டுரை இடம் தராது. எனவே, நம்மிடையே வாழும் அந்த நல்லோர் கூட்டத்தின் தலைவராய்-ஒன் றுக்கு மேற்பட்ட உயர்ந்த காரணங்களால் தமிழ் மக்கள் இதயத்தில் கலை வளர்க்கும் சான்ருேர்களுள் தந்திகரற்ற தலைவராய்ப்-போற்றப் பெறும் பெரியாரை மட்டுமேனும் ஈண்டு நன்றியுடன் நினைவு கூர்தல் பொருத்தமுடைய தாகும். ஆண்டாலும் அறிவாலும் பட்டுணர்வாலும் மூத்து முதிர்ந்த அப்பெரியார் பேராசிரியர் டாக்டர் சேதுப்பிள்ளை அவர்களே ஆவர்." அவர்தம் தமிழ் வாழ்வை யும் அருள் நிறைந்த தொண்டையும் ஆராயும்போது, சங்க இலக்கியம் பயின்ருர்க்குச் சிறுபாண் ஆற்றுப் படையுள் வரும்,

எழுவர் பூண்ட ஈகைச் செந்நூகம்

விரிகடல் வேலி வியலகம் விளங்க

ஒருதான் தாங்கிய உரனுடை நோன்தாள்' என்னும் அடிகள் நினைவுக்கு வருதல் இயற்கையே.

கடந்த இரு தலைமுறைகளாகத் தமிழிலக்கியம் வாழ்வும் வளமும் பெறத் தொண்டாற்றிய பேராசிரியர்

48. பேராசிரியர்-டாக்டர்-ரா.பி.சே. அவர்கள் உயிரு டன் இருந்த காலத்தில் எழுதப்பெற்றது.

49. சிறுபாணுற்றுப்படை, 113-5.