பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரைக் கலை 17;

ரத்தில் பத்துக் குற்றம் பற்றியும் பத்தழகு பற்றியும் பாடியருளிய இரு சூத்திரங்களே".

தமிழ் மொழியில் கட்டுரை நடை இளங்கோ அடிகள் காலத்து இருந்தது. போன்ருே, இறையர்ை அகப் பொருள் காலத்து இருந்தது போன்ருே-ஏன்?- சிவஞான முனிவர் காலத்து இருந்தது போன்ருே கூட இப்போது இல்லை. இன்றுள்ள நிலையும் இன்னும் பல்லாண்டுகள் கழித்து இருக்கும் என்று உறுதி சொல்ல முடியாது. காரணம், கன்னித்தமிழ் சாகா வரம் பெற்றது; காலதி துக்கேற்ற கோலம் கொள்ளும் கடப்பாடுடையது. இந் நீர்மை வாழும் மொழிகள் அனைத்திற்கும் இன்றியமை யாது வேண்டுவதாகும்”. அதஞலேயே உரையாசிரி யர்கள் உரைக்கு உரையாசிரியர்களைத் தேடும் நிலை மாறிப் பல்லே உடைக்கும் பண்டித நடை என்பதெல் லாம் போய்-கல்லையும் கனிவிக்கும் கன்னல் தமிழ் நடை இன்று மக்கள் மன்றில் அரசோச்சுகின்றது. வருங் காலத்தில் மொழிச் செம்மையே தகளியாக, இலக்கியச் சுவையே நெய்யாக, எளிமைப் பண்பே இடுதிரியாக, சிந்தனையே சுடராகக் கொண்டு தமிழ்க் கட்டுரை விளக்கு ஏற்றப்படுதல் திண்ணம்.

தமிழ் மொழி மிகு தொன்மை வாய்ந்தது. அதைச் சுட்டிக் காட்டும் கலங்கரை விளக்கே தொல்காப்பியம். ஆராய்ச்சி அறிஞர்" வியந்து போற்றும் பெரும் பழமை சான்ற இந்நூலுள்ளேயே கட்டுரைக்கலை"யின் வித்தைக்

51. நன்னுரல்-12, 13

52 An Introduction to the Study of Literature-W. H. " Hudson :1946. p. 335.

53. The Antiqulty of Tami! & Thołka opiar – Prof • S. Arumugha Mudai iar–Tamil Culture-Vol. I, Nos. 3 and 4

54. (1) மறுமலர்ச்சி உரை நடை - பேராசிரியர் பூ. ஆலாலசுந்தரஞர், மதுரைத் தமிழ்ச் சங்கப்பொன் விழா மலர், - -