பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

慧究罗 ஆராய்ச்சிக் கட்டுரைகள்

கண்டோம். பல நூற்ருண்டுகளாய் அவ்வித்துக் கண்ட விளவையும் ஒருமித்துப் பார்த்தோம். நம் தலைமுறையில்

அக்கலையின் வளர்ச்சியால் கருத்து வேறு பாடுகட்குரிய

இரு சிக்கல்கள் எழுத்துள்ளன. ஒன்று. தனித்தமிழ்

பற்றியது; மற்ருென்று பேச்சுத் தமிழும் எழுத்துத்

தமிழும் ஒன்ாய் இருத்தல் வேண்டுமா வேண்டாவா என்பது பற்றியது. இவ்விரு சிக்கல்கள் பற்றியும் மொழிப் புலமையும் முற்போக்குணர்வும் படைத்த அறிஞர்கள் ஆராய்ந்து தெளிவுபடுத்தி உள்ளார்கள்." அவர்கள் கருத்துவழி நின்று, தனித்தமிழைப் பெரிதளவு போற் றியும், பேச்சுத்தமிழின் கொச்சை நிலையைக் களைந்தும் பணி செய்தலே அறிவும் அறமுமாகும்.

வெள்ளத் தனைய மலர் நீட்டம்; மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு."

என்று பாடினர் வள்ளுவப் பெருந்தகையார். இப்பொன் மொழியைப் பல்வேறு கருத்துகட்கும் பொருத்திப் பார்க் கலாம். அந்த வகையில் கவிதைக் கலைக்கு அடுத்த நிலையில் கட்டுரைக் கலையை எந்தச் சமுதாயம் உணர்ந்து உவந்து போற்றுகின்றதோ, அந்தச் சமுதாயத்தின் அறிவு நிலை போற்றுதற்கு உரியதாகும். காரணம், சிறு கதையினும் தொடர்நிலைக் கதைகளினும் தரமுயர்ந்த கட்டுரைகளேப் படைத்ததற்கு அறிவும் உணர்வும் ஒழுங்கும் உறுதியும் தேவை இப்பண்புகளைக் கொண்டு படைக்கப் பெறும் கட்டுரைக் கலையைப் போற்றவும் இப்பண்புடைய உள்ளங்கள் தேவை. எனவே, கட்டுரைக் கலையின் வளர்ச்சி சமுதாய அறிவின் உயர்ச்சி என்றும் கூறலாம்,

55. (2) வளருந்தமிழ்--சோம. லெ, 56. திருக்குறள், 59.5.