பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரைக் கலை #73

இத்தகு பண்பு வாய்ந்த கட்டுரைக்கலை வருங் காலத்தில் மேலும் வளர்ச்சி பெறச் சில வழிகளையும் மேற்கொள்ளலாம். சிறப்பாக, (1) உலகின் பல்வேறு மொழிகளிலும் வெளிவந்துள்ள-வெளி வரும்-தலை சிறந்த கட்டுரைகளை அவ்வப்போது தமிழில் ஆக்கி வெளி யிடலாம். (2) தமிழ் மொழியில் இது வரை வெளி வந்துள்ள சிறந்த கட்டுரைகளைப் பல்வேறு கோணங்களி னின்றும் ஆராய்ந்து தேர்ந்து, ஒரு பெருங்கட்டுரைக் களஞ்சியத்தைத் தொகுதி தொகுதியாகத் தொகுத்து வெளியிடலாம். (3) புதுப்புது வகைகளில் கட்டுரைக் கலை வளரப் பல்வகையான நன்முறைகளில் தமிழ் எழுதி தாளரை ஊக்குவிக்கலாம்.

இன்னேரன்ன வகைகளில் எல்லாம் இனறியமையா ததும், உடனடியாக நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டியதுமாகிய ஒரு கடமை, தமிழகப் பல்கலைக் கழகங்களில் எம்.லிட் , பிஎச்.டி. பட்டங்கட்காகத் தமிழர் -மொழி- இலக்கியம்- வரலாறு- பண்பாடு-சமயம் முதலியனபற்றி எழுதப்படும் ஆராய்ச்சியுரைகள் மட்டு மேனும், தமிழிலேயே எழுதப்படுமாறு விதிமரபு வகுக்கப் படவேண்டும். இவ்வாராய்ச்சியுரைகளின் மூலம் தமிழாக இருந்தால்தான் உயர் ஆராய்ச்சியும் ஓங்கும்; செறிவை யும் செம்மையையும் இரு கண்களாகக் கொண்டு, தமிழ்க் கட்டுரைக் கலையும் ஓங்கி உயரும்; அசல் ஆங்கிலமாகவும் நகலே தமிழாகவும் இருக்கும் குறையும் மறையும்.

இவ்வாறெல்லாம் கண்ணும் கருத்துமாய்க் கட் டுரைக் கலையைப் போற்றி வளர்ப்போமானல், வருங் காலத்தில் தமிழ்க் கட்டுரை மேலும் தழைத்து உலக நாடுகள் போற்றும் உயர்வைப் பெறும். பிறமொழிகளி விருந்து தலை சிறந்த கட்டுரைகளைத் தமிழில் ஆக்கி,

அதனல் புத்தாக்கம் பெற்றுப் புதுப்புது வழிகளில் கட்டு