பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17& ஆராய்ச்சிக் கட்டுரைகள்

ஏழு ஆண்டுகட்கு முன்பே கோவை மாநகரில் பூ.சா.கோ. கலைக்கல்லூரியில் நிகழ்த்திய கலைவிழாப் பேச்சொன்றில் எடுத்து விளக்கியுள்ளமை ஈண்டு நினைந்து மகிழ்தற் குரியது. டாக்டர் மு. வ. அவர்கள் வாசகம் வருமாறு:"தமிழ் இலக்கிய அரங்கிலே மாறுதல் செய்தார் சேதுப்பிள்ளை. சென்னையிலே இலக்கியக் கூட்டங் களாளுல் 50 பேர் வத்துகொண்டிருந்தனர். தம்முடைய சொற்பொழிவுகளின் மூலம் 30-ஐ 50,000 ஆக்கித் தந்தவர் அவர். தமிழுக்கு ஒரு நல்லது என்ருல், அவர் உடலிலே தெம்பு; முகத்திலே உவகை. தமிழுக்கு ஒர் இடையூறு என்ருல், அவர் உடலிலே தளர்ச்சி முகத்திலே கவலை. இப்படியாக அவர் தமிழைத் தம் வாழ்வோடு வாழ்வாக இணைத்து வாழ்கிருர்:

இராசவல்லிபுரம்: இத்தகு பெருமை வாய்ந்த பேராசிரியரின் வாழ்க்கை இன்றைக்கு அறுபத்தைந்து ஆண்டுகட்கு முன்னே, "திக்கெல்லாம் புகழும் திருநெல் வேலி க்கு அண்மையில் அமைந்துள்ள அழகிய சிற் றுரராகிய இராசவல்லிபுரத்தில் அரும்பியது. பொருநை ஆற்றங்கரையில் பொலிவுடன் விளங்கும் இராசவல்லி புரம் இயற்கை அமைதியும், இறையருளும், வரலாற்றுச் சிறப்பும் நிரம்பப் படைத்த பெருமை உடையது. இவ் வுண்மையைப் பிறந்த மண்ணின் பெருமை பேசும் நன்றி சான்ற நல்லுள்ளத்தோடு பேராசிரியர் அவர்களே தம து அழகிய கட்டுரை ஒன்றிலே ஆர்வத்தோடு குறிப்பிடுதலைக் காணலாம். அச் சொல்லோவியம் வருமாறு:

"பொருநையாற்றின் கரையிலே செப்பறை என் ருெரு தலம் உண்டு; தனியே அதற்கொரு நலம் உண்டு.

2. பி.எஸ்.ஜி. கல்லூரிக் கலை மலர் (1954), பக்-தஐ. 3. ஆற்றங்கரையினிலே (1961), பக்.215. ஊரும் பேரும் (1950), பக், 103-4.