பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#78 ஆராய்ச்சிக் கட்டுரைகள்

மருந்தாய்-1895-ஆம் ஆண்டில் பிறந்தவரே நம் பேரா சிரியர். ஒரு குலத்துக்கு ஒரு மைந்தராய்த் தோன்றிய பிள்ளையை, உயிரெனப் போற்றி வளர்த்தார், இனறு மைந்தர் புகழை எல்லாம் தம் புகழாய்க் கொண்டு விளங்கும் அன்னையார் சொர்ணம்மாள் அம்மையார், அந்த முன்னறி தெய்வம் காட்டிய பேரன்பில் ஊறி வளர்ந்த பேராசிரியர் உள்ளத்தில், பிள்ளைப்பருவம்முதலே தமிழன்பும் தாயன்பும் போட்டியிட்டு வளர்ந்தன.

கல்விப் பயிற்சி ; பேராசிரியர் அவர்களது எழுத்துப் பயிற்சி இராசவல்லிபுரத்துத் திண்ணைப் பள்ளிக்கூடத் திலேயே தொடங்கியது. அப்பயிற்சியில் தேர்ச்சியுற்ற பின்னர், நம் பேராசிரியர் ஐந்தாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பாளையங்கோட்டை அர்ச், சேவியர் உயர்நிலைப்பள்ளி"யிலும், இடைக்கலை வகுப்பின்ே இரண்டாண்டுகளையும் திருநெல்வேலி இந்துக் கல்லூரி யிலும், இளங்கலை வகுப்பின் இரண்டாண்டுகளையும் சென்னை பச்சையப்பர் கல்லூரியிலும் பயின்று வெற்றி பெற்ருர். அக்காலத்தில் பேராசிரியர் அவர்களுக்குத் தமிழ் கற்பித்த ஆசிரியர்களுள் தலைசிறந்தவர் இருவரா வர்: ஒருவர் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராய் விளங்கிய திரு. சுப்ரமணியப் பிள்ளை; மற்ருெருவர், இந்துக் கல்லூரித் தமிழாசிரியராய் விளங்கிய தொல் காப்பிய வல்லுநர் திரு. சிவராமபிள்ளை. ஆங்கிலமும் தமிழும் வல்ல அவரே, பிள்ளை அவர்கள் பின்னுள்களில் சிறந்த தமிழ்ப்புலமை பெற வித்திட்டு வாழ்த்தியவர்.

4. துன்முகி ஆண்டு, மாசித் திங்கள், பூச நல்லோரை. 5. St. Xavier's High Schoof. 6. intermediate, 7. M. D. T. Hindu College, Tirunelvely

B. A.

8