பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் சேதுப்பிள்ளையவர்கள். #73%

பேராசிரியர் அவர்கள் மாணவ வாழ்க்கையிலேயே பெரும்புகழுடன் திகழ்ந்தார்; சிறப்பாகத் தமிழ்த் தேர்வு களிலும் தமிழ்ப் பேச்சுப் போட்டிகளிலும் தமிழ்நலத் தொண்டுகளிலும் தலை சிறந்து விளங்கினர். சென்னே பச்சையப்பர் கல்லூரியில் இளங்கலை வகுப்பில் பயின்று கொண்டிருந்தபோது நடைபெற்ற பேச்சுப் போட்டி ஒன்றில் சிறப்பாகப் பேசிப் புகழ்பெற்றமையே பிள்ளை அவர்களின் பிற்கால நல்வாழ்விற்கு வித்திட்டது எனல் மிகையாகாது. அப் பேச்சுப் போட்டியில் பிள்ளை அவர் களின் சொற்றிறம் கண்ட, ஆந்நாள் பச்சையப்பர் கல்லூரி ஆங்கிலப் பேராசிரியர் உயர்திரு. கே. பி. இராம நாதன் அவர்கள், கூடுதலான சம்பளம் கொடுத்துப் பிள்ளை அவர்களைப் பச்சையப்பர் கல்லூரித் தமிழ்த் துறையில் சி. ற் ரு சி ரி ய ர ய் ப் பணி புரியும்படி ஏற்பாடு செய்தார். அ ப் போது பச்சையப்பர் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராய் விளங்கிய பெருந் தகையார் திருமணம் -செல்வக்கேசவராயர். தமிழுக்குக் கதியாவார் கம்பரும் திருவள்ளுவருமே என்ற அழகிய கருத்தை வெளியிட்டும், அருந்தமிழ்க் கட்டுரைகள் பல வரைந்தும், பன்னுறு மாணவர்களைத் தமிழமுதுTட்டி வளர்த்த பெருமாளுகிய செல்வக்கேசவராயரின் சீரிய தலைமையில் தொண்டாற்றும் பேற்றினைப் பெற்ற சேதுப் பிள்ளை அவர்களின் ஆசிரிய வாழ்க்கை, சென்னைப் பச்சையப்பர் கல்லூரித் தமிழ்த் துறையில் தொடங்கி யது எண்ணி எண்ணி மகிழ்தற்குரியது. தலே சிறந்த கொடையாளராகிய பச்சையப்பர் புகழ் பரப்பும் அத நிலையத்தில் தொடங்கிய பேராசிரியர் பணி, நாளும் பொலிவு பெற்று. இன்று தமிழகம் தலை வணங்கும் நிலை 9. Tutor என்ற ஆங்கிலச் சொல்லிற்குச் சிற்ருசிரியர் என்று தமிழாக்கம் கண்டவரும் நம்பேராசிரியசே,