பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#82 ஆராய்ச்சிக் கட்டுரைகள்

திருநெல்வேலியில் வழக்கறிஞராய் இருந்தபோதும், ஆண்ணுமலைப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராய் இருந்த நாள்களிலும் பேராசிரியர் எழுதிய மிகச் சிறந்த நூல்களே தமிழ் நாட்டு நவமணிகள்', 'திருவள்ளுவர் நூல் நயம்', 'சிலப்பதிகார விளக்கம்', 'கால்டுவெல் ஐயர் சரிதம் என்பவை; இந்நூல்களின் சிறப்பும் நூலா சிரியர் புகழும் பேராசிரியர் கா. சு. பிள்ளை அவர்களால் "இலக்கிய வரலாற்றிலேயே" பொறிக்கப் பெற்றுள்ளன என்ருல், வேறு புகழுரையும் வேண்டுமோ?

சென்னைப் பல்கலைக் கழகத்தில்: அ ண் ணு மலை யி ல் ஆறு ஆண்டுகள்' பணியாற்றிப் பெரும்புகழுடன் விளங் கிய பேராசிரியர் அவர்கள், 1936-ஆம் ஆண்டு, ஆகஸ்டு திங்கள் முதல் தலைமைத் தமிழ் விரிவுரையாளராய்ச்' சென்னைப் பல்கலைக் கழகத்தில் பொறுப்பேற்ருர்கள். அப்போது தமிழ்த் துறைத் துணைப் பேராசிரியராயும் தமிழ்த் துறைத் தலைவராயும்' விளங்கிய திரு. எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்களுடன் ஒத்துழைத்துச் சென்னைப் பல்கலைக் கழகத்தின் சார்பில் வெளியிடப் பெற்ற தமிழ்ப் பேரகராதியின் இணைப்புத் தொகுதியை இனிது முடிக்கத் துணை புரிந்தார்கள்"

பலவகைப் பணி: செ ன் னை ப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறையில் சேர்ந்தபின் பிள்ளை அவர்கள் பெருந் தமிழ்த் தொண்டால் சென்னைப் பல்கலைக் கழகம் மட்டுமே அன்றி, சென்னை மாநகரும் செந்தமிழ் நாடும் புத்தொளி பெற்றன. சேதுப்பிள்ளையவர்களின் பேச்சைக்

12. இலக்கிய வரலாறு-கா.சு. பிள்ளை (1930), பக்.540. 13, 1930–1936

14. Senior Lecturer in Tami! 15. Reader and of the Dept. of Tamil 15. Tamil Lexicon—Supplement (1939), P. V.