பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் சேதுப்பிள்ளையவர்கள்...... 184

கேட்கச் சென்னை மாநகர மக்களும் செந்தமிழ் நாட்டு மக்களும் கூட்டம் கூட்டமாய்க் கூடினர்கள். தமிழில் பேசுவது தாழ்வு’ என்று அந்நாளில் இருந்த சூழ்நிலையைப் பேராசிரியர் அவர்கள் தமது எடுப்பான தோற்றத்தா லும் மிடுக்கான பேச்சாலும் அறவே மாற்றியருளிஞர்கள். ஆங்கில உடை அணிந்து அருந்தமிழில் சொற்பொழிவு செய்த பேராசிரியர் அவர்களின் பேச்சைக் கேட்க்க கல்லூரி இளைஞர்களும் அலுவலக ஆணையாளர்களும் போட்டியிட்டுக்கொண்டு மன்றங்களில் குழுமிஞர்கள். அக் காட்சியைக் கண்ட பிள்ளை அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு ஒர் அளவில்லை. வான் கண்ட வண்ணமயில் போலத் தமிழர் கூட்டம் மகிழப் பிள்ளையவர்கள் களி கொண்டு தமிழ் மழை பொழிவார்கள். அவ்வாறு அவர் கள் அந்நாள்களில் பொழிந்த சொற்பொழிவால் விளைந்த வெள்ளப் பெருக்கின் விளைவு இந்நாளில் விளைந்துள்ள தமிழ் வளத்திற்குத் தலையாய காரணங்களுள் ஒன்று என்ருல், அது ஒரு சிறிதும் மிகையாகாது. இந்த வகையில் பேராசிரியர் அவர்கள் சென்னை மாநகரில் ஒய் எம். சி. ஏ. வில் நடத்திய கம்பராமாயணச் சொற் பொழிவுகளையும், ஒய் எம். ஐ.ஏ.வில் நடத்திய சிலப்பதி காரச் சொற்பொழிவுகளையும், கந்த கோட்டத்தில் நடத்திய கந்தபுராணச் சொற்பொழிவுகளையும், தங்க தங்கசாலையில் நடத்திய திருக்குறட் சொற்பொழிவு களையும், சிறப்பாகக் குறிப்பிட வேண்டும்.

ஆராய்ச்சிக் கட்டுரைகள்: மே ைட ப் பேச்சால் தமிழுணர்ச்சியையும் தமிழறிவையும் பெருக்கியதைப் போன்றே, பிள்ளை அவர்கள், தமது ஆராய்ச்சித் திறனுலும் எழுத்தாற்றலாலும் கட்டுரைக் கலையையும் தமிழாராய்ச்சித் துறையையும் வளர்த்து வாழ்வித்