பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

置岛4 ஆராய்ச்சிக் கட்டுரைகள்

தார்கள். பேராசிரியர் அவர்கள் சென்னைப் பல்கலைக் கழகத்தில் தொண்டாற்றிய கடந்த 25 ஆண்டு எல்லையில் பல்கலைக் கழக வெளியீடாகவும், பல்கலைக் கழக இசை வோடும் வெளியிட்ட தமிழ் நூல்கள் இருபத்தொன்று' ஆகும். இவையன்றி, சென்னைப் பல்கலைக் கழகக் கிழக்கு நாடுகட்கல ஆய்வு மலரில்' ஆங்கிலத்தில் வரைந்த ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஒன்பது: தமிழில் வரைந்த ஆராய்ச்சிக் கட்டுரைகள் இரண்டு.” பேராசிரியர் அவர் கள் 1955-ஆம் ஆண்டு அண்ணுமலேப் பல்கலைக் கழகத்தில் கூடிய அனைத்தித்தியக் கிழக்கு நாடுகட்கலே ஆராய்ச்சி மாநாட்டுக்குத் தலைமை தாங்கி நிகழ்த்திய பேருரை சென்னைப் பல்கலைக் கழக 1953-55-ஆம் ஆண்டுகட்குரிய கிழக்கு நாடுகட்கல ஆய்வு மலரில் வெளியிடப் பெற் இறுள்ளது. இவையே அன்றி, இந்த நூற்ருண்டின் சிறந்த வெளியீடாகிய தமிழ்க் கலைக்களஞ்சியத்தில் பேராசிரியர் அவர்கள் வரைந்துள்ள கட்டுரைகள் ஐந்து." அவ்வப் போது வெளியிடப்பெற்ற புகழ்பெற்ற இதழ்களின் ஆண்டு மலர்களிலும், சிறப்பு மலர்களிலும், பெருமக்கள் பாராட்டு மலர்களிலும் பேராசிரியர் அவர்கள் வரைந்த கட்டுரைகளுள் சிறப்பானவை பதின் மூன்று இவற்றுள் ஆறு தமிழ், ஏழு ஆங்கிலம். பெருமை சான்ற இப் பணியே அன்றிப் பேராசிரியர் அவர்கள் தமது பல்கலைக் கழக வாழ்க்கையில் மகிழ்வுடன் ஈடுபட்டது அனைத்திந் தியக் கிழக்கு நாடுகட்கலே ஆராய்ச்சி மாநாட்டுப் பணியே ஆகும். பிள்ளை அவர்கள் 1937-ஆண்டு தொடங்கி, 1955-ஆம் ஆண்டுவரை இரண்டாண்டுகட்கு

17. இணைப்பு-!. பார்க்க 18-21, இணைப்பு-1, பார்க்க 22. இணைப்பு-!!!. பார்க்க 23. இணைப்பு-V. பார்க்க