பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியச் சேதுப்பிள்னே பவர்கள் ... 13?'

இலக்கியமும் தமிழ்மக்களும் பெற்ற சிறப்புக்களை ஒரு சிறிது ஆராய்வோம்:

(ஆ) புலமை கலன்கள்

நூல்வகை : இது வரை வெளிவந்துள்ள பேராசிரியர் தமிழ் நூல்களை (!) ஆராய்ச்சிக் கட்டுரைகள், (2) வாழ்க்கை வரலாறுகள், (3) பதிப்புக்கள் என்று மூவகையாகப் பாகுபடுத்தலாம். அவற்றுள் கட்டுரை நூல்கள் பதின்ைகு வாழ்க்கை வரலாற்று நூல்கள் மூன்று: பதிப்பு நூல்கள் நான்கு. பிள்ளை அவர்கள் குமரன் இதழில் பல்பொருள் பற்றியும், ஆனந்த போதினியில் கம்பன் கவியின்பம் பற்றியும் எழுதிய நூற்றுக்கு மேற் பட்ட கட்டுரைகள் இன்னும் நூல் வடிவம் பெறவில்லே. அவை நூல்களாக உலாக்கொள்ளும் நாளைத் தமிழகம் ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளது.

கட்டுரைக்கலை : பேராசிரியர் அவர்கள் எழுத்தாற்ற லால் தமிழ்மொழியில் கட்டுரைக்கலை தனிச் சிறப்புற்றுள் ளது என்ற வாய்மையை ஒப்புக்கொள்ளாத தமிழ்ப் பேரறிஞர் எவரும் இலர், சென்னைப் பல்கலைக் கழகத் திற்கு வாவதற்கு முன்பே, பிள்ளை அவர்கள் சொற் பொழிவுக் கலையில் சிறந்திருந்தது போன்றே கட்டுரை எழுதும் ஆற்றலிலும் சிறந்திருந்தார்கள் என்ற செய்தி யைப் பேராசிரியர் கா. சு. பிள்ளை அவர்கள் தமது இலக்கிய வரலாற்றிலேயே குறிப்பிட்டுள்ளார்கள்." பேராசிரியர் அவர்கள் எழுதிய நூல் ஆராய்ச்சிக் கட்டுரை நூல் திருவள்ளுவர் நூல் நயம் என்பதேயாகும்.

20. இலக்கிய வரலாறு-காசு. பிள்ளை ( 1930) பக்: 5.49