பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் சேதுப்பிள்ளையவர்கள்...... I 33

யாவர்க்கும் எளிதில் விளங்கும் வண்ணம் தெள்ளென வகுத்தோதி ஊக்கமூட்டும் செவ்விய உரைநடை நூல் இல்லாத குறையை நிறைவு செய்த பெரும்புலவர் இத் திருவள்ளுவர் நூல்நயம் எழுதிய திருவாளர் சேதுப் பிள்ளையேயாவர்."

திருவள்ளுவர் நூல் நயம் சிறந்த கட்டுரை நூல் மட்டுமன்று; தெளிவும் துணிவும் நிறைந்த ஆராய்ச்சி நூலுமாகும்; திருக்குறளுக்குப் பரிமேலழகர் கண்ட உரை சிறந்ததே எனினும், பல இடங்களில் அவர் கண்ட பொருள் திருவள்ளுவர் உட்கிடைக்கு ஒவ்வாது என்ற உண்மையை முப்பது ஆண்டுகட்கு முன்பு இவ்வளவு தக: மாகவும் விளக்கமாகவும் எழுதிய திறம் நம் பேராசிரி யரையே சாகும். இச்சிறப்பையும் பேராசிரியர் கா. க. பிள்ளை அவர்களே தமது முன்னுரையில் உவப்புடன் கட்டியுள்ளார்கள்.”

"திருவள்ளுவர் நூல் நய' த்தைத் தொடர்ந்து, பேராசிரியர் அவர்கள் வரைந்த கட்டுரை நூல் சிலப்பதி கார விளக்கம்' என்பது, இதையடுத்து எழுந்ததே வீரமாநகர். இந்த முறை வைப்பை எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் இலக்கிய வரலாற்று முறையிலேயே அமைந்த பேராசிரியர் அவர்கள் நூல்களின் போக்கு இனிது புலணுகும். எழுத்திலும் பேச்சிலும் எண்ணத் திலும் பாரதியாரைப் போன்றே நம் பேராசிரியரும் பெரும்பாலும் எடுத்தாண்டு போ ற் று. ம் மூன்று புலலர்பெருமக்கள் திருவள்ளுவரும் இளங்கோவும் கம்பரு மேயாவார்கள். இந்த உண்மையை அறிந்தவர், நூல்கள் களே ஆராயும்போதே அவருடைய இலக்கிய நோக்கும் அடிநாள் தொட்டு நடுக்கமின்றி அமைந்துள்ள நீர்

33. திருவள்ளுவர் நூல் நயம், பக். டு, சு.