பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

İğÜ ஆராய்ச்சிக் கட்டுரைகள்

பிள்ளே அவர்கள் படைத்துள்ள கட்டுரை நூல்கள் பதின்மூன்றையும் தனித்தனியே ஆராய்வதற்கு இச்சிறு கட்டுரை இடந்தராது, எனவே, பேராசிரியர் அவர்கள் கட்டுரைகளால் நாட்டுக்கும் மொழிக்கும் ஏற்பட்ட நன்மைகளுள் தலையாய சிலவற்றை மட்டும் சிந்திப் போம்:

கணக்கிட்டுப் பார்க்கும்போது இது வரை பேராசிரி யர் அவர்கள் எழுதுகோல் உருவாக்கி நூல் வடிவு பெற்ற தமிழ்க் கட்டுரைகளின் மொத்த எண்ணிக்கை இருநூற்று ஐம்பதிற்குமேல் செல்கின்றது. மொத்தப் பக்கங்களின் எண்ணிக்கையோ, இரண்டாயிரத்து ஐந்நூற்றுக்குமேல் செல்கின்றது. நூல் வடிவு பெருத கட்டுரைகளையும் கருதினுல், கட்டுரைகளின் தொகை முந்நூற்றைம்பதாக வும், பக்கங்கள் தொகை நாலாயிரமாகவும் பெருகும். இக் கட்டுரைகளுள் பல தமிழகத்தின் மதிப்பிற்குரிய இதழ்களை-வெளியீடுகளே-ஆணி செய்தவை; மற்றும் பல, வானெலியில் நிகழ்த்திய உரைகள். உரை", கட்டுரை ஆகிய சொற்கள் எழுத்து, பேச்சு இரண்டை யுமே பழங்காலத்தும் சுட்டிய பான்மையை ஆராய்ச்சி அறிஞர் அறிவர்." அவ்வகையில் பல மேடைப் பேச்சு களும் வானெலிப் பேச்சுக்களும் பேராசிரியர் அவர்கள் கட்டுரைத் தொகுதிகளும் இடம் பெற்றிருத்தல் பொருத் தமே ஆகும். மேலும், மேடைப் பேச்சுக்கு இலக்கணம் கூறும் கட்டுரை மட்டுமன்றி, மேடைப் பேச்சுக்கு இலக்கியமாய் அமைந்த கட்டுரைகளும் பேராசியர் அவர்கள் கட்டுரைத் தொகுதிகளுள் இடம் பெற்றுள்

34. Words and their Significance—R.P. Sethu Pillai (1953)

pp. 39, 60

35. அலையும் கலேயும் (1958), கட்டுரை எண்-15,