பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் சேதுப்பிள்ளையவர்கள்...... İsğj

ளன. இச்சிறப்பை எண்ணிப் பார்க்கும்போது தோன் றும் கருத்து ஒன்று உண்டு. அது பேராசிரியர் அவர்கள் மேடைப் மேச்சு நடையும் கட்டுரை நடையும் ஏறத் தாழ ஒரு தன்மையாகவே அமைந்துள்ளமை. இந்த வகையில் பேராசிரியர் அவர்கட்கு முன்னேடியாய் விளங்கியவர் தமிழப் பெரியார் திரு. வி. க. அவர்களே. அது ஒரு சிறந்த காரணம் போலும், சுத்தானந்த பாரதி யார் அவர்கள் தமிழின்பம்' என்னும் நூலின் முன்னுரை யில், 'உரை கடை'யில் தமிழின்பம் நுகர வேண்டுமானுல் திரு. வி. க., சேதுப்பிள்ளை ஆகிய இரு புலவ்ர்களின் செந்தமிழைச் செவிமடுக்க வேண்டும்." என்று கூறிய மைக்கு! பேசுவது போன்றே எழுதவும் வேண்டும்." என்பது மறுமலர்ச்சி எழுத்தாளர் சிலர் கருத்து. இக் கருத்தைப் பெரும்பாலும் அறிஞர் உலகம் ஏற்பதில்லை." காரணம், பேச்சு நடையில் உள்ள கொச்சைப் போக்கு எல்லாம் எழுத்திலும் இறங்கிவிடுமானுல், மொழிப் பண்பும் இலக்கியப் பண்பும் பாழ்பட்டுவிடும் என்பதே. ஆனால், இந்த அச்சத்திற்குத் தமிழ்ப்பெரியார் தி வி. க., பேராசிரியர் சேதுப்பிள்ளை போன்றவர்களிடம் இடமே இல்லையல்லவா?

பண்பு: இவ்வாறு தமது பேச்சொலியையே பெரும் பாலும் எழுத்தொலியிலும் பதிய வைத்துப் பேராசிரியர்

36. (1) அலையும் கலையும் (1358), கட்டுரை எண்கள்5, 21.

(2) தமிழின்பம் (1959)-கட்டுரை எண்கள் 1 முதல்

5 வரை. 37. தமிழின்பம் (1959), முன்னுரை-பக். W. 88. மறுமலர்ச்சி-உரைநடை-பேராசிரியர் பூ, ஆலால சுந்தரனர்-மதுரைத் தமிழ்ச் சங்கப் பொன் விழா மலர், பக். 37.8-9.