பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*游委 ஆராய்ச்சிக் கட்டுரைகள்

மையும் வறுமையும், (3) இறையவரும் இன்னுயிரும், (8) ஆண்மையும் அருளும், (89) கர்ணனும் கும்பகர்ண லும், (40) காளத்தி வேடனும் கங்கை வேடனும்"

பேராசிரியர் அவர்கள், எதுகை மோனே இன்பத் தோடு, எளிய வகையில் சிலேடை இன்பத்தையும் சமயம் அறிந்து வழங்க வல்லவர்கள். ஒரு சான்று:

"இச்செய்திகளை நண்பர் வாயிலாக அறிந்த ஐயர், 'இன்ன செய்தாரையொறுத்தல் அவர் நாண நன்னயஞ் செய்து விடல், என்னும் பொய்யா மொழியின் வழி நின்று, அன்னர் இன்னரென்பதறிந்தும், நன்னயம் புரிவாராயினர்.”

இன்ஞர் என்னும் சொல், இன்னவர்கள், கொடிய வர்கள் என்னும் இரு பொருளும் தருமன்ருே?

பேராசிரியர் அவர்கள் பைந்தமிழ்நடையில், குறிக்கத் தக்க பெருஞ்சிறப்புக்கள் வேறு இரண்டு உண்டு. ஒன்று, முன்ளுேர் மொழி பொருளே அன்றி அவர் மொழியும் பொன்னேபோல் போற்றும் திறன்; மற்ருென்று, ஏற்ற இடங்களில் சிறந்த இலக்கியப் பகுதிகளை அள வறிந்து மேற்கோளாக எடுத்துக் காட்டல். பின்னதற் கும் மேற்கண்ட மேற்கோளே ஒரு சான்று." இவ்விரு

50. தமிழ் இன்பம் (28-40) 51. கால்டுவெல் ஐயர் சரிதம் (1936), பக். 110. 52. தன்னுரல்-பொதுப் பாயிரம், சூ. 3. 53. இலக்கியப் பொன்மொழிகளை மேற்கோளாக எடுத் துக்காட்டலே அன்றி, அப்பொன்மொழிகளைத் தம்மொழி களாகவே ஆக்கித் தமிழ் உரைநடைக்கு உரமூட்டியதும் பேராசிரியர் ஆற்றியதொரு பெருஞ்செயலாகும். மேற்குறிப் பிட்ட கால்டுவெல் ஐயர் சரிதத்தில் மட்டும், ஆசிரியர் ஏற்த் தாழப் பத்துப் பக்கத்திற்கு ஒர் இலக்கியப் பொன்மொழியை பாவது தம் மொழியாகவே ஆக்கி அளித்துள்ளார்.