பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் சேதுப்பிள்ளையவர்கள்..... 29 |

தமிழில் வாழ்வு தேடித்தந்த பெருமை பேராசிரியர் அவர் கட்கு உண்டு. தமிழ்நாட்டு நவமணிகள், கால்டுவெல் ஐயர் சரிதம், கிறிஸ்துவத் தமிழ்த் தொண்டர்’ என்னும் மூன்று நூல்களும் பேராசிரியர் படைத்த வாழ்க்கை வர லாற்று நூல்களாகும். இவற்றுள் முதன் முதலாக எழுதப் பட்டது தமிழ்நாட்டு நவமணிகளே. ஆதிரையார், விசாகையார், மருதியார், கோப்பெருந்தேவியார், மணி மேகலையார், கண்ணகியார், புனிதவதியசர், மங்கையர்க் கரசியார், திலகவதியார் ஆகிய ஒன்பதின்மர் வாழ்க்கை வரலாறுகளைச் சுருக்கி உரைக்கும் இந்நூலே, பேராசிரியர் அவர்கள் எழுதுகோல் படைத்த முதல்நூல். திரு. பரவி. சு. நெல்லையப்பரின் லோகோபகாரியில், நாற்பதாண்டு கட்குமுன் வெளிவந்த இந்நூல் உரை நடை உலகிலும் வாழ்க்கை வரலாற்றுத் துறையிலும் சாதித்தசாதனையை, இந்நூலுக்கு முன்னுரை புகன்ற சர். திரு டின். சிவஞானம்பிள்ளே அவர்கள்" திறம்பெறக் குறிப்பிட்டுள் காமை இங்குக் கருதற்குரியது. அவர் வாசகம் வருமாறு:

'திருவாளர் ஆர். பி. சேதுப்பிள்ளையவர்கள் எழுதி யிருக்கும் தமிழ்நாட்டு நவமணிகள் என்னும் இந்நூலைப் பார்வையிட்டு மிகவும் மகிழ்வெய்தினேன். பண்டைய தமிழ் மக்களின் வாழ்க்கைச் சிறப்பை இக்காலத்துத் தமிழ்ச் சிருர்க்கு எடுத்தோதும் புத்தகங்களும், பண்டு தொட்டுச் சரித்திர வாயிலாகவும் பனுவல்கள் மூலமா கவும் அறியக்கிடக்கும் நம்நாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறுகளும், தற்காலம் வெளிப்போந்துள்ள நூல்களுள் காண அரிதாயினவே என்று. நெடுநாளாக நானும் என்

70. த. துெ. சிவஞானம் பிள்ளை-முன்னுள் சென்னை

மாநில அமைச்சர்.

71. தமிழ் நாட்டு நவமணிகள்-முன்னுரை,