பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் சேதுப்பிள்ளையவர்கள்.....,. 3cm3

ஒப்புயர்வற்ற வகையில் எழுதப்பட்டிருக்குஞ் சிறப்பினைக் கால்டுவெல் ஐயர் சரிதத்திலே காணலாம். கால்டு வெல் பெரியாரைப் போன்றே தமிழுக்காகப் பாடுபட்ட ஒன்பதின்மர்க்கு மேற்பட்ட உத்தமரின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கி உரைப்பதே பேராசிரியர் அவர்களின் கிறிஸ்துவத் தமிழ்த் தொண்டர்’ என்னும் நூல்.

'பெருமக்களின் வாழ்க்கைகளே வையகத்தின் சிறந்த ஆசிரியர்கள்' என்று பவுலர்" என்ற அறிஞரும், 'நன்முக எழுதப்பட்ட ஒரு வாழ்க்கை வரலாறு நன்ருக வாழப்பட்ட ஒரு வாழ்க்கையைப் போன்றே அரியது. படிப்பதற்கு மிகவும் இன்பமும் பயனும் பயக்கத்தவல்லன. வாழ்க்கை வரலாறுகளே' என்று கார்லேல்’ என்ற அறிஞரும் மனமாறப் போற்றியுள்ளனர். இத்தகு சிறப்பு வாய்ந்த வாழ்க்கை வரலாற்று நூல்களைத் தமிழன்னைக் குச் சிறந்த அணிகலன்களாகத் தந்த பெருமை, பேராசிரி யர் சேதுப்பிள்ளை அவர்கட்கு உண்டு. கால்டுவெல் ஐயர் சரித'த்தை அழகொழுகும் தமிழில் எழுதியளித்த அவர் கள் புகழ், அழியாத தன்மை வாய்ந்தது.

ஆராய்ச்சிப் பெருநூல்-ஊரும் பேரும் :

பேராசிரியர் அவர்கள் படைத்த தமிழ் உரை தடை நூல்கள் பதினேழு ஆயினும், அவற்றுள் தலைசிறந்த தாய்-பேராசிரியர் அவர்களின் வாழ்நாள் பணி நூல் (Life Work) என்ற போற்றத் தக்கதாய்-உள்ள பெரும்

73, ”The best teachers of humanity are the lives of great rnen.“–Fowț8 r. -

74. “ ..., a well-written #ife is almost as rare as a wełł

spent one ... ...Biography is the most universal fly pleasant and profitable of ałł reading.”

--The New Dictionary of Thoughts