பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2gs ஆராய்ச்சிக் கட்டுரைகள்

பேராசிரியர் அவர்களுடைய மொழியாராய்ச்சி பற்றிய கட்டுரைகள், தமிழ்மொழியில் ஆராய்ச்சித்துறை யில் ஒரு புதுத் திருப்பத்தையும், மேம்பாட்டையும் அளித்தன என்பது உறுதி. பேராசிரியர் அவர்கள் இருபது ஆண்டுகட்கு முன்னர் வித்திட்ட இம்மொழியாராய்ச்சித் துறை, இன்று மேலும் பல வளர்ச்சிகளைக் கண்டுள்ளது.

பேராசிரியர் அவர்களுடைய சொல்லாராய்ச்சி பற்றிய நூலும் கட்டுரைகளும், பேராசிரியருடைய துரவறிவிற்கும் நுண்ணறிவிற்கும் சிறந்த சான்றுகளாய் விளங்குகின்றன. சொற்களும் அவற்றின் பொருட் சிறப் பும் என்னும் நூலில் மட்டும், ஏறத்தாழ ஐந்நூறு சொற் கள் ஆராய்ச்சிக்கு இலக்காகியுள்ளன. செந்தமிழும் கொச்சைத் தமிழும் பற்றிய கட்டுரைகளில் ஆயிரம் சொற்களும், “ஊரும் பேரும் பற்றிய கட்டுரை களில் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஊர்ப் பெயர்களும் ஆர ய் ச் சி க்கு உரியனவாகியுள்ளன. இவ்வாறு ஆயிரக்கணக்கான தமிழ்ச் சொற்களை மொழியியற் கண்ணுேடு ஆராய்ந்து பல உ ண் ைம க ளே த் தேர்ந்து தெளிவுபடுத்தியுள்ள பேராசிரியர் அவர் களுடைய உழைப்பும் திறனும் மனமாறப் போற்றுதற்கு உரியன அல்லவா? -

பேராசிரியர் அவர்களுடைய, உண்மை உணர்ச்சி யோடு கூடிய ஆராய்ச்சிகள் அனைத்திலும், அணிசெய்யும் உயர்ந்ததொரு பண்பினை ஈண்டுச் சிறப்பாகக் குறிப்பிடல் பொருத்தமும் பயனுமுடையதாகும். அப்பண்புதான் மாக்ஸ் முல்லர் போன்ற ஆராய்ச்சி அறிஞரும் போற்றும் ஒப்பாராய்ச்சித் திறன்." சொல்லொடு சொல்லையும் கருத்

86. ‘’Aji higher know sedge is gained by comparison, and rests on comparison,’’-Max Muifer–Lectures on the Science of Religion, p. 12, .