பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் சேதுப்பிள்ளையவர்கள்...... 2üg

தொடு கருத்தையும் ஒப்பு நோக்கிச் சுவையும் பவனும் காணும் திறன், பேராசிரியர் சேதுப்பிள்ளை அவர்கட்கு இயற்கையாகவே அடிநாள் தொட்டே அமைந்துள்ள உண்மையை, அவருடைய கட்டுரைகளையும் நூல்களையும் காவமுறைப்படியே ஆராய்ந்து பார்ப்பவர் உணர்வது திண்ணம்.

பேராசிரியருடைய பதிப்புகள் (1) கந்த புராணத் திரட்டு,(2)பாரதியார் இன்கவித் திரட்டு, (3)சேஞ் சொற் கவிக்கோவை, (4) தமிழ்க் கவிதைக் களஞ்சியம் ஆகிய நான்குமாகும். இவற்றுள் முதலாவதாகிய கந்தபுராணத் திரட்டின. 1934-ஆம் ஆண்டில், சென்னைக் கந்தகோட்டத் தில் பேராசிரியர் அவர்கள் கந்த புராண வகுப்பு நடத்திய போது, அவ்வகுப்பிற்காகக் கந்தபுராணத்தில் ஏறக் குறைய ஆயிரத்தைந்நூறு பாடல்களைத் திரட்டிப் பொழிப்புரையுடன் மூன்று பகுதிகளாக வெளியிட்டார் கள். வேலின் வெற்றி என்னும் உரைநடை நூல் இந்தக் கந்தபுராணத் திரட்டைத் தழுவி எழுந்ததே ஆகும்."

“பாரதியார் இன்கவித் திரட்டு சாகித்திய அக்காடெமி வெளியீடு: பாரதியார்பாடல்களுள் சிறந்தன பலவற்றின் தொகுப்பாய் இந்நூல் இருநூற்றுப் பதினுெரு பக்கங் களைக் கொண்டது. செஞ்சொற் கவிக்கோவை தென் மொழிகள் புத்தக அறப்பொறுப்பு வெளியீடு. சங்கப் பாடல் தொட்டுப் பாரதியார் பாடல் ஈருகப் பல இனிய தமிழ்ப் பாடல்களின் தொகுப்பு, நூற்று நான்கு பக்கங் களைக் கொண்ட இந்நூல். தமிழ்க் கவிதைக் களஞ்சியம்’ சாகித்திய அக்காடெமி வெளியீடு. இந்நூல்கள் முறையே அவ்விரு நிறுவனங்களின் தனிச் சிறப்பு வெளியீடுகளாய் அமைந்த பெருமை உடையன ஆகும். பழந்தமிழ்ப்

87. வேலின் வெற்றி-முன்னுரை. . ஆ.-14