பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

ஆராய்ச்சிக் கட்டுரைகள்

'உருகெழு மரபிற் கடவுட் பேணியர்

கொண்ட தீயின் சுடரெழு தோறும் விரும்புமெய் பரந்த பெரும்பெயராவுதி வருநர் வரையார் வார வேண்டி விருந்துகண் மாரு துணி இய பாசவர் ஊனத்தழித்த வானினக் கொழுங்குறை குய்விடுதோறு மாரு தர்ப்பக் கடலொலி கொண்டு செழுநகர் நடுவண் அடுமை யெழுந்த வடுகெய்யாவுதி இரண்டுடன் கமழு காற்றமொடு வானத்து கிலேபெறு கடவுளும் விழைதகப் பேணி”

(பதிற்றுப்பத்து, 21, 5.15)

என்பது காண்க.

"குட்டுவ இடமகன்ற உன் நாட்டில், மக்கள் பசியும் பிணியும் பகையுமின்றி இனிது வாழுமாறு நீ செங்கோல் செலுத்தும் திறத்தால் விளைவு குன்றுதலில்லை. வெற்றி வீரர்கள் போரில்லாமையால் அம்புவிடும் ெ தாழிலை அறவே மறக்கும்படி ஆயி ற்று. கோடை நீடுதலால் மலே அருவி வளமிழந்த பெரிய வறட்காலத்திலும், கரை கடந்து செல்லும் பேரியாறு, தழைகளைச் சூடிக்கொண்டு போர் விரும்பிப் படையெடுத்து வருவாரைப்போலப் பெருக்கெடுத்து வரும். அப்போது அப் பெருக்கினைத் தடுக்க விளைபுலங்களில் உண்டாகும் பூசலல்லது வேறு போர்க்கொடுமை எதுவும் இல்லாத நாடு உன் நாடு. இவற்ருல் உன் தேயம் வியக்கத்தக்க செல்வம் கொழிப்ப தாய்ச் சிறந்து விளங்குகின்றது," என்னும் கருத்ை தக் கொண்டது பின் வரும் பாடல்:

"திருவுடைத் தம்ம பெருவிறற் பகைவர் பைங்கண் யானைப் புணர்கிரை துமிய உரந்துரங் தெறிந்த கறையடிக் கழற்காற்