பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் சேதுப்பிள்ளையவர்கள்......... Bİİ

பரனர் போன்றவர்களின் முனைத்த முயற்சிகளால், தமிழகம் தனது ஆழ்ந்த அடிமைத் துயிலினின்றும் நீங்கி, அப்போதுதான் கண்களை நிமிட்டிக் கசக்கிக் கொண்டிருந்தது. அந்த நிலையில் அரசியல் சுழல் எதிலும் சிக்கிக்கொள்ளாமல், அருந்தமிழ்ப் பணியை மொழிப் பற்ருேடும் நாட்டுப்பற்ருேடும் வெற்றி ஒளியோடும் நடத்திய விழுமிய செயல் பேராசிரியர் அவர்கட்குத் தனிப் பெருமை தருவதாகும். முப்பது ஆண்டுகட்கு முன்னே பேராசிரியர் அவர்கள் அழகும் ஆற்றிலும் நிறைந்த தமிழில் எழுதிய அழகிய கட்டுரைகள், இன்று நாட்டில் பெருக்கெடுத்துள்ள தமிழார்வ வெள்ளத்திற் திற்குக் கட்டியங்கூறின. ஆற்று வெள்ளம் அடுத்துவரும் குறி தோன்றும் ஈழ மின்னல் மலை யாள மின்னலாப்" அக்கட்டுரைகள் இலக்கிய வானில் ஒளிர்ந்தன.

பேராசிரியர் அவர்கள் கட்டுரைகள் நாட்டு மக்கள் நெஞ்சில் தமிழார்வத்தைப் பெருக்கியதோடு, தமிழா ராய்ச்சி ஆர்வத்தையும் பெருமளவிற்குத் துரண்டின. எவ்வாறு ஆங்கில மோக கொண்ட தமிழர்களின் செவிகளையும் சிந்தையையும் பேராசிரியர் அவர்களின் குற்ருல அருவி போன்ற பேச்சுகள் தமிழ் மயமாக்கி னவோ, அவ்வாறே பேராசிரியர் அவர்களின் பொரு நைப் புனல் போன்ற கட்டுரைகள். தமிழ் மக்களின் கண்களையும் கருத்தையும் தமிழ்மயமாக்கின. அதன் விளைவாகத் தமிழகத்தில் புது யுகம் பூத்தது. கலை பயிலும் இளமாணவர்களும் அலுவல்பார்க்கும் மூத்தமக்களும் பாடல்களை ஒதி ஓதி இலக்கிய இன்பம் நுகர்வது போன்றே, பேராசிரியர் அவர்களின் பைந்தமிழ்க் கட்டுரைகளையும் படித்துப் படித்துத் தமிழின்பம்' கண்டனர். தமிழ் விருந்து உண்டனர்; தமிழ் வீரம்" கொண்டனர். அம்மட்டோ பேராசிரியர் அவர்கள்