பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 ஆராய்ச்சிக் கட்டுரைகள்

AASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAAAS AASAASAASAAeieeAAASAAAS

சிறந்த பண்பு படைத்த பேராசிரியர் அவர்கள், தமது புலமைத் திறத்தால் தமிழ் மக்கட்குச் செய்த தொண் டிற்கு எவ்வாற்ருனும் குறையாதி தொண்டைத் தமது பண்பு நலன்கள் பழுத்த தமிழ் தழிஇய வாழ்க்கையால் ஆற்றியுள்ளார்கள் என்பதை, ' நவில்தோறும் நூல் நயம்’ போற்றும் எவரும் அறிவர். பேராசிரியர் அவர்களோடு நெருங்கிப் பழகியவர்கள், அவர்தம் புலமையினக் கண்டு வியப்பதினும், அவர்தம் பண்பு நலன்களை உனர்ந்து உணர்ந்து உள்ளம் களித்தலும், நெஞ்சம் நெகிழ்தலுமே செய்வார்கள்.

கலையுணர்வு :

பேராசிரியர் அவர்களுடைய பண்பு நலன்களுள் எல் லாம் பொன்னுெளி வீசுவது அவர்களுடைய கலே யுணர்வே. பேராசிரியர் அவர்களுடைய பொறிபுலன் கள் யாவும் கலையுணர்வே கறிக்கோளாகக் கொண்டவை. கலையுணர்வுக்கு மாான எதையும் எப்போதம் எதற்காக வும் அவர்கள் விரும்புவகம் இல்லை; போற்றுவதும்இல்லை. பேராசிரியர் அவர்களுடைய கலையுணர்வின் ஆழத்தை அவர்கள் கட்டுரைகளைச் சொல் சொல்லாகச் சொல்லி எழுதச் சொல்லும்போது அப்பணியை மே |ற்கொண்ட ஒரு சிலர் நன்கறிவர். அப்பேற்றினைப் பல காலம் பெற்ற இக்கட்டுரையாளன், பேராசிரியர் ஆழ்கடலில் மூழ்கி முத்துக் களிப்பவர் போல, உணர்வுக்கடலில் மூழ்கி மூழ்கி உண்மையுணர்வு முத்துக்களை முங்கிக் கொண்டுவந்து மெல்ல மெல்லக் காட்டிய-கொட்டிய காட்சியைக் கண்டபோது அடைந்த மெய்ப்பாடுகள் உணர்வுக்கு இனியன; உரைக்கு அரியன:

முத்தமிழ்த் துறையிலும் நெஞ்சைப் பறிகொடுத்த பேராசிரியரின் எழுத்துக்கும் பேச்சுக்கும் ஊற்ருய் இருக்