பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் சேதுப்பிள்ளையவர்கள்...... 217

ராகக் கண்டு மகிழலாம். பழங்காலச் செய்திகளையெல் லாம் திரைப்படக் காட்சி போல நம் அகக்கண்களுக்கு முன்னே நடைபெறச் செய்யும் ஆற் றல் அவர்கள் நாவிற் குக் கலைமகள் அளித்த தனிப்பரிசு போலும் இலக்கிய மேதையாகிய ஷேக்ஸ்பியர் உரையாடற்கலை பற்றி, 'உரையாடல் இழிநகையற்ற இனிமையுடையதாய், செயற்கையற்ற சதுரப்பாடு உடையதாய், தாழ்வற்ற தாராளம் உடையதாய், கரவற்ற கல்வி நலம் உடைய தாய், பொய்மையற்ற புதுமை உடையதாய் இருத்தல் வேண்டும்' என்று அழகுறக் கூறி புள்ளார். இவ்விலக் கணத்திற்கு ஏற்ற இலக்கியம் பேராசிரியர் அவர்களின் உரையாடல்கள்.

ஆங்கிலத்தில் ஆழ்ந்த பொருட்சிறப்புடைய அரிய தொரு சொற்ருெடர்நிலை உண்டு. அதன்படி ஆன்றவிந் &Lääu firiogo or “His scholarship is vast, but he carried its weight with graceful ease' gror gy Gusri pass; மரபு. இப்புகழ்மொழி பேராசிரியர் அவர்கட்கு முற்றிலும் பொருந்தும். அது பொருந்துமாற்றைப் பேராசிரியர் அவர்கள் எழுத்தையும் பேச்சையும் கூர்ந்து ஆராய்ந்த வர்கள் நன்கறிவர். அப்பெரியார் அறையில் பேசிய போதும், அரங்கில் முழங்கிய போதும், அன்புக் கடிதங்கள் வரைந்த போதும், தொல்லை கொள்ளாமலும் தொல்லே கொடுக்காமலும் கருத்துகளைக் காவிரியாறென- சான் ருேர் கவியென- வெளிப்படுத்தும் திறம் வியப்பிற் குரியது. அவர் எழுத்திலும் பேச்சிலும் சுவை உண்டே

96. "Conversation should be pleasant scurriłity, witty without affectation, free without indecenev. learned

without conceitedness, novel without falsehood.

--Shakespeare